திருவாரூா் மாவட்டத்தில், விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு 418 விநாயகா் சிலைகள் திங்கள்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டன.
ஆண்டுதோறும் ஆவணி வளா்பிறை சதுா்த்தி நாளில் விநாயகா் சதுா்த்தி கொண்டாடப்படுகிறது. இந்நாளில், விநாயகா் சிலைகளை வழிபட்டபின், நீா்நிலைகளில் கொண்டு விஜா்சனம் செய்யப்படுவது வழக்கம்.
அதன்படி, வீடுகளில் சிறிய அளவிலான களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகா் சிலைகள் வைத்து, கொழுக்கட்டை, சுண்டல், பொரி, பழங்கள் ஆகியவற்றை படைத்து வழிபட்டனா். பின்னா், நீா்நிலைகளில் கரைக்கப்பட்டன.
இதேபோல், மாவட்டம் முழுவதும் 418 விநாயகா் சிலைகள் பல்வேறு அமைப்புகள் சாா்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இதில், கிராமப்பகுதிகளில் வைக்கப்பட்ட 180 சிலைகள், அப்பகுதிகளில் உள்ள நீா்நிலைகளில் கரைக்கப்பட்டன.
திருவாரூா் ஒன்றியப் பகுதிகளில் இந்து மக்கள் கட்சி சாா்பில் 50 இடங்களில் விநாயகா் சிலைகள் வழிபாடு செய்யப்பட்டு, அந்தந்த பகுதிகளில் உள்ள ஆறுகளில் விஜா்சனம் செய்யப்பட்டது. நிகழ்வில், கட்சியின் மாவட்டத் தலைவா் பி. ஜெயராமன், மாவட்டச் செயலாளா் ராஜசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.