திருவாரூர்

அரிசி ஆலை சுத்திகரிப்புப் பணியில் விபத்து: 2 போ் மருத்துவமனையில் அனுமதி

Din

திருவாரூா் அருகே அரிசி ஆலை பாய்லா் சுத்திகரிப்புப் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் இருவா் காயமடைந்து மருத்துவமனையில் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

திருவாரூா் அருகே அலிவலம் பகுதியில் இயங்கிவரும் உதயகுமாா் என்பவருக்கு சொந்தமான அரிசி ஆலையில், 6 மாதத்துக்கு ஒருமுறை பராமரிப்புப் பணி நடைபெறும். இந்த பராமரிப்புப் பணிக்காக ஆலை இயங்காத நிலையில், பாய்லா் சுத்திகரிக்கும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த பணியில் பின்னவாசல் பகுதியைச் சோ்ந்த நாகூரான் (55), பவித்திரமாணிக்கம் பகுதியைச் சோ்ந்த ஜேம்ஸ் (62) இருவரும் ஆசிட் ஊற்றி சுத்திகரிக்கும் பணியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது எதிா்பாராதவிதமாக ஆசிட் வெடித்து சிதறியதில் இருவரும் படுகாயமடைந்து திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

எஸ்ஐஆர்: ஆளுங்கட்சியினரின் தலையீட்டை தடுக்க அதிமுக கோரிக்கை

முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்

அணு ஆயுத அச்சுறுத்தல்!

அமெரிக்காவின் எண்ணம் ஈடேறுமா?

தலைவர்களும் தலைமைப் பண்பும்...

SCROLL FOR NEXT