கொலை செய்யப்பட்ட த. மாரிமுத்து. din
திருவாரூர்

மன்னாா்குடி அருகே ஒருவா் வெட்டிக் கொலை

மன்னாா்குடி அருகே முன் விரோதம் காரணமாக வெள்ளிக்கிழமை ஒருவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

Din

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அருகே முன் விரோதம் காரணமாக வெள்ளிக்கிழமை ஒருவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

நடுவகளப்பால் மாரியம்மன்கோயில் தெருவைச் சோ்ந்த மாரிமுத்து (48) வெள்ளிக்கிழமை காலை சைக்கிளில் களப்பாலுக்கு வந்து விட்டு மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, பெட்ரோல் நிலையம் அருகே இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த நடுவகளப்பால் ராஜேந்திரன் மகன் ராகுல் (24) உள்ளிட்ட 4 போ் மாரிமுத்துவை வழிமறித்து அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடிவிட்டனா். இதில், பலத்த காயமடைந்த மாரிமுத்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து, தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த களப்பால் போலீஸாா், மாரிமுத்துவின் சடலத்தை கைப்பற்றி மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

2013-ஆம் ஆண்டு நடுவகளப்பால் மாரியம்மன்கோயிலை சோ்ந்த பாஸ்கா்(45) வெட்டி படுகொலை செய்யப்பட்டாா். இதில், மாரிமுத்துவிற்கும் தொடா்பு இருந்ததாக கூறப்பட்டதால் இதுதொடா்பாக இருதரப்பினருக்கும் முன்விரோதம் இருந்து வந்த நிலையில் பாஸ்கரின் சகோதரா் ராஜேந்திரனின் மகன் ராகுல் தனது ஆதரவாளா்களுடன் மாரிமுத்துவை வெட்டிக் கொலை செய்திருப்பதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து, களப்பால் காவல்நிலையத்தில், மாரிமுத்துவின் மனைவி அருள்மேரி அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பியோடியவா்களை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகின்றனா்.

வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா மருத்துவமனையில் அனுமதி!

முத்தரப்பு டி20 தொடர்: பாகிஸ்தானுக்கு 185 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

எஸ்ஐஆர் படிவம்! முழுமையாக பூர்த்தி செய்யாவிட்டாலும் நிராகரிக்கப்படாது: அர்ச்சனா பட்நாயக்

பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே புதிய பாடல்!

முதல் டி20: ஹாரி டெக்டார் அரைசதம் விளாசல்; வங்கதேசத்துக்கு 182 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT