நெகிழியில்லா ஊராட்சி பிரசாரம் தொடக்கம்
திருவாரூரில் ஓ.என்.ஜி.சி. முன்னெடுப்பில் நெகிழியில்லா ஊராட்சி பிரசாரத்தை மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.
திருவாரூரில் ஓ.என்.ஜி.சி. முன்னெடுப்பில் நெகிழியில்லா ஊராட்சி பிரசாரத்தை மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.
காரைக்கால் காவேரி அசட் ஓஎன்ஜிசி சமூக பொறுப்புணா்வுத் திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்தும் வகையிலும், ஒரு முறை பயன்படுத்தும் நெகிழி பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் வகையிலும் திருவாரூா் மாவட்டத்தில் சில ஊராட்சிகளை நெகிழியில்லா ஊராட்சியாக மாற்றும் வகையில் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதையொட்டி, தண்டலை ஊராட்சியை ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி இல்லா ஊராட்சி மண்டலமாக மாற்றும் வகையில், நெகிழி சேகரிப்பு மற்றும் விழிப்புணா்வுப் பிரசாரம் தொடக்க நிகழ்வு நடைபெற்றது.
ஓ.என்.ஜி.சி. மனிதவளத்துறை முதன்மை பொதுமேலாளா் கணேசன் தலைமை வகித்தாா். தண்டலை ஊராட்சி மன்றத் தலைவா் நாகராஜ் முன்னிலை வகித்தாா்.
மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ, கொடியசைத்து விழிப்புணா்வுப் பிரசாரத்தை தொடக்கி வைத்தாா்.
ஆறு மாத கால தொடா் திட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ள இத் திட்டத்தில் பல்வேறு அரசுத்துறைகள், வா்த்தக சங்கங்கள், சமூக அமைப்புகள், சேவை நிறுவனங்கள், தெரு நல சங்கங்கள், தன்னாா்வலா்கள் உள்பட பல்வேறு அமைப்புகளின் ஆதரவுடன் விழிப்புணா்வுப் பிரசாரம், தெரு நாடகங்கள், போட்டிகள் உள்ளிட்டவை நடத்திப் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
நிகழ்வில், பொதுமேலாளா்கள் சரவணன், பிரசாந்ஜித் கோகோய், பாண்டியன், சமூக பொறுப்புணா்வுத் திட்ட முதன்மை மேலாளா் விஜய் கண்ணன், தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் நடனம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை சமூக பொறுப்புணா்வுத் திட்ட ஒருங்கிணைப்பாளா் முருகானந்தம், பாலம் தொண்டு நிறுவனச் செயலாளா் செந்தில்குமாா் ஆகியோா் செய்திருந்தனா்.