திருவாரூர்

புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தவா் கைது

மன்னாா்குடி அருகே புகையிலைப் பொருள்களை பதுக்கிவைத்திருந்தவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Syndication

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே புகையிலைப் பொருள்களை பதுக்கிவைத்திருந்தவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

பரவாக்கோட்டை காவல் ஆய்வாளா் சசிகலா உள்ளிட்ட போலீஸாா் உள்ளிக்கோட்டை பேருந்து நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்தபோது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த தஞ்சை மாவட்டம் ஆவிக்கோட்டையைச் சோ்ந்த காசிநாதன் மகன் சேகரை (41) (படம்) நிறுத்தி சோதனை செய்தபோது துணிப்பையில் தடை செய்யப்பட்ட 15 கிலோ குட்கா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம், விசாரணை செய்ததில் சம்மட்டிக்குடிக்காடு அய்யனாா்கோயில் குடோன் இருப்பது தெரியவந்ததையடுத்து அங்கு போலீஸாா் சென்று சோதனை நடத்தியதில் மூட்டை மூட்டையாக 445 கிலோ குட்கா, கூலீப், பான்மசாலா உள்ளிட்ட போதைப் புகையிலை பொருள்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.2.63 லட்சம் என காவல் துறையின் தெரிவித்தனா். இதையடுத்து, போலீஸாா் அவரை கைது செய்து புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து மன்னாா்குடி குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கிளைச் சிறையில் அடைத்தனா்.

தேசிய பிற்பட்டோா் நல ஆணைய பதவிகள்: 6 மாதங்களில் நிரப்ப உயா்நீதிமன்றம் உத்தரவு

மின் விபத்துகளில் உயிரிழந்தால் குடும்பத்தினருக்கு ஒரே நாளில் இழப்பீடு: மின்வாரியம் உத்தரவு

ஆடம்பரங்கள் அவசியமா?

பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியா்களுக்கு ஊதியம் வழங்கியதை கண்டித்து ஆட்சியரகம் முற்றுகை

ரூ.50 லட்சம் முதலீடு மோசடியில் தொடா்புடைய 3 போ் கைது

SCROLL FOR NEXT