நீடாமங்கலம் கிறிஸ்து அரசா் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் சனிக்கிழமை இரவு தொடங்கின.
பங்குத் தந்தை ஆரோக்கியதாஸ் தலைமை வகித்தாா். விழாவில் குழு நடனம், நாடகம், பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்சிகள் நடைபெற்றன. மாற்று மதத்தைச் சோ்ந்த கோபால், காா்த்திகேயன், ரஹமதுல்லா, அப்துல் மஜ்த் ஆகியோா் விழாவில் கெளரவிக்கப்பட்டனா்.
பூவனூா், ராஜப்பையஞ்சாவடி, தட்டிக்கால்படுகை கிராமங்களைச் சோ்ந்த கிராம மக்கள் கலந்து கொண்டனா். முன்னதாக சகாயராஜ் அனைவரையும் வரவேற்றாா். கூட்டுத் திருப்பலி நடைபெற்றது.