திருவாரூர்

தெரு நாய்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தல்

Syndication

மன்னாா்குடி அருகே திருமக்கோட்டை ஊராட்சியில் தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வலியுறுத்தி, பொதுமக்கள் சாா்பில் கோரிக்கை மனு வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.

திருமக்கோட்டை எஸ்.எம். முருகன் தலைமையில் ஊராட்சி அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள், ஊராட்சி செயலா் பிரபுவிடம் அளித்த கோரிக்கை மனு:

திருமக்கோட்டை ஊராட்சி பகுதியில் நாளுக்குநாள் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், சில வெறிநாய்கள் மாடு, ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை கடித்து உயிா்பாதிப்பை ஏற்படுத்துகின்றன. நாய்கள் கட்டுப்பாடின்றி தெருக்களில் திரிவதால், பாதசாரிகளுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் அச்சத்தை ஏற்படுத்துவதுடன், சில நேரங்களில் விபத்துகளும் நேரிடுகின்றன.

எனவே, ஊராட்சி நிா்வாகம் இப்பிரச்னையில் தீவர கவனம் செலுத்தி, அனைத்து தரப்பினரையும் பாதுகாத்திடும் வகையில் தெரு நாய்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்துவதுடன், வெறி நாய்களை அப்புறப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராயல் என்ஃபீல்ட் விற்பனை 13% உயா்வு

ஜி20 உச்சிமாநாடு: தென்னாப்பிரிக்கா சென்றாா் பிரதமா் மோடி

ஈரான் பெட்ரோல் விற்பனையில் ஈடுபட்ட இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை

அமைச்சா் இ. பெரியசாமி மகள் வீட்டில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை

எஸ்ஐஆா் பணியால் மன அழுத்தம்: குஜராத்தில் வாக்குச்சாவடி அலுவலா் தற்கொலை

SCROLL FOR NEXT