டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் தொய்வு: மாநகராட்சிகள் மீது எதிர்க்கட்சிகள் புகார்
மாநகராட்சிகள் மேற்கொள்ளும் டெங்கு தடுப்பு டநடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
மாநகராட்சிகள் மேற்கொள்ளும் டெங்கு தடுப்பு டநடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
இது தொடர்பாக எதிர்க்கட்சியினர் திங்கள்கிழமை கூறியதாவது: டெங்கு நோய் பெரும்பாலுலம் கொசுப் பெருக்கத்தால் வருகிறது. இதனால், கொசுப் பெருக்கம் தொடர்பாக 2017 - 2018-இல் சுமார் 47 லட்சம் வீடுகளில் மாநகராட்சி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது 1,830 வீடுகளில் டெங்கு கொசுக்கள் இனப்பெருக்கம் இருந்தது கண்டறியப்பட்டது. ஆனால், இந்த எண்ணிக்கை முந்தைய ஆண்டுகளை விட மிகவும் குறைவானதாகும். 2016 - 2017-இல் சுமார் 70 லட்சம் வீடுகளில்சோதனை நடத்தப்பட்டதில், சுமார் 2,369 வீடுகளில் டெங்கு கொசுக்கள் இனப்பெருக்கம் செய்துள்ளது கண்டறியப்பட்டது. அதேபோல, 2015 - 2016 -இல் சுமார் 63 லட்சம் வீடுகளில் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
கொசுப் பெருக்கத்தைத் தடுக்க மாநகராட்சிகள் மேற்கொள்ளும் நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்டதற்கு சுகாதாரத் துறை அதிகாரிகள் இரு வாரம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதே முக்கியக் காரணமாகும். அவர்களுக்கு மாநகராட்சிகள் ஊதியம் வழங்காததால் அவர்கள் போராட்டத்தில் குதித்தனர் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை தெற்கு தில்லி மாநகராட்சி அதிகாரிகள் மறுத்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் மேலும் கூறியதாவது:
கொசுக்களால் பரவும் நோய்களைத் தடுப்பதற்கான முழு முயற்சிகளில் மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது.
கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யக் கூடிய வகையில் வீடுகளில் நீர் தேங்கியிருந்தால் வீட்டு உரிமையாளருக்கு ரூ.50,000 வரை அபராதம் விதிக்கப்படுகிறது. நிகழாண்டில் 168 வீடுகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கொசுப் பெருக்கத்தை தடுக்க முழு முயற்சியுடன் பாடுபட்டு வருகிறோம் என்றனர்.