டிடிஇஏ பள்ளியில் அடல் டிங்கரிங்' ஆய்வுக்கூடம்
மாணவர்களின் ஆராய்ச்சி மனப்பான்மையை வளர்க்கும் வகையில் பூசா சாலையில் உள்ள தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளியில் அடல் டிங்கரிங் ஆய்வுக்கூடம் அமைக்கப்படவுள்ளது.
மாணவர்களின் ஆராய்ச்சி மனப்பான்மையை வளர்க்கும் வகையில் பூசா சாலையில் உள்ள தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளியில் அடல் டிங்கரிங் ஆய்வுக்கூடம் அமைக்கப்படவுள்ளது.
நாட்டிலுள்ள பள்ளிகளில், மாணவர்களின் ஆராய்ச்சி மனப்பான்மையை வளர்க்கும் வகையில், அடல் டிங்கரிங் ஆய்வு கூடம் அமைக்க நிதி ஆயோக் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. இதற்கு நாடு முழுவதும் இருந்து சுமார் 15,000 பள்ளிகள் விண்ணப்பித்திருந்தன. இவற்றில் 1,500 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தில்லி மத்திய மண்டலத்தில் பூசா சாலை டிடிஇஏ பள்ளி உள்பட 5 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து, அடல் டிங்கரிங் ஆய்வுக் கூடத்தின் பொறுப்பு அதிகாரி உன்னத் பண்டிட், ஆய்வு செய்வதற்காக பூசா சாலை டிடிஇஏ பள்ளிக்கு அண்மையில் வருகை தந்தார். அவர் பள்ளியில்ஆய்வு செய்ததுடன் மாணவர்களுடனும் உரையாற்றினார். இந்த நிகழ்வில் நிர்வாகக் குழு உறுப்பினர் பரமசிவம் முன்னாள் மாணவர்கள் கணேஷ் ஐயர், ஸ்ரீராம், வைத்தியநாதன், ராதிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முதல்வர் (பொறுப்பு) சித்ரா ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார். இது தொடர்பாக் டிடிஇஏ செயலர் ஆர். ராஜு கூறுகையில், இந்த ஆய்வு கூடம் மூலம் மாணவர்களின் ஆய்வுத் திறன் வளரும். டிடிஇஏ மாணவர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பாக அமையும்' என்றார்.
ஆய்வுக்கூடம் அமைப்பதற்கு முதல் ஆண்டில் ரூ. 12 லட்சத்தை நிதி ஆயோக் வழங்குகிறது. ஆய்வுக் கூடம் அமைக்கப்பட்ட பிறகு, அதை பராமரிக்க அடுத்த நான்கு வருடங்களுக்கு ரூ.2 லட்சத்தை நிதி ஆயோக் வழங்குகிறது.