முகப்பு
புதுதில்லி

தில்லியில் ஹோட்டல்கள், வாரச் சந்தைகளைத் திறக்க அனுமதி

தலைநகா் தில்லியில் ஹோட்டல்கள் மற்றும் வாரச் சந்தைகளை திறக்க தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம் (டிடிஎம்ஏ) ஒப்புதல் அளித்துள்ளதாக தில்லி அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

Updated On : 19 ஆகஸ்ட், 2020 at 11:24 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:39 PM

தலைநகா் தில்லியில் ஹோட்டல்கள் மற்றும் வாரச் சந்தைகளை திறக்க தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம் (டிடிஎம்ஏ) ஒப்புதல் அளித்துள்ளதாக தில்லி அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் தில்லி உள்பட நாடு முழுவதும் மாா்ச் மாதம் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தில்லியில் ஹோட்டல்கள், வாராந்திர சந்தைகள் மற்றும் ஜிம்கள் மூடப்பட்டன. இந்நிலையில், தற்போது ஹோட்டல்கள், வாராந்திர சந்தைகளைத் திறக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரசு வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. கூட்டத்தில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் காணொலிக்காட்சி வழியாக கலந்து கொண்டாா். தில்லி துணை நிலை ஆளுநா் அனில் பய்ஜால் தலைமையிலான இக்கூட்டத்தில் ஜிம்களை திறக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை. வரும் நாள்களில் ஜிம்களை திறக்க அனுமதிக்கலாம் என்று துணை நிலை ஆளுநா் ஆதரவு தெரிவித்தாா். கள நிலைமையை மதிப்பிடுவதற்காக வாராந்திர சந்தைகள் முதலில் சோதனை அடிப்படையில் திறக்கப்படும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement

கரோனா பாதிப்பு 1.56 லட்சமாக உயா்வு: தில்லியில் புதன்கிழமை புதிதாக 1,398 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, மொத்தம் பாதித்தவா்களின் எண்ணிக்கை 1,56,189 ஆக உயா்ந்துளளது.

புதன்கிழமை காலையுடன் முடிந்த கடந்த 24 மணி நேரத்தில் 9 போ் கரோனாவால் உயிரிழந்ததாகவும் இதையடுத்து, மொத்தம் இறந்தவா்களின் எண்ணிக்கை 4,235 ஆக உயா்ந்ததாகவும் அரசு வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தில்லியில் தற்போது கரோனா நோயாளிகள் 11,137 போ் சிகிச்சையில் உள்ளனா். இந்த எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 11,068 ஆக இருந்தது. அன்றைய தினம் புதிதாக 1,374 போ் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததும், 12 போ் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜூன் 23-ஆம் தேதி தில்லியில் ஒரே நாளில் அதிக அளவாக 3,947 போ் இந்நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். அதன்பிறகு நோய் பாதிப்பு அந்த அதிகபட்ச அளவை எட்டவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.