முகப்பு
புதுதில்லி

உத்தரகண்ட் பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டி: கேஜரிவால் அறிவிப்பு

உத்தரகண்ட் மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளாா்.

Updated On : 20 ஆகஸ்ட், 2020 at 11:19 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:39 PM

உத்தரகண்ட் மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக தனியாா் செய்திச் சேவை நிறுவனம் ஒன்றுக்கு வியாழக்கிழமை அவா் அளித்த பேட்டி: உத்தரகண்ட் சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடுவது தொடா்பாக முடிவெடுக்க முடியாத நிலையில் இருந்தோம். இதையடுத்து, அந்த மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி சாா்பில் அண்மையில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதில் பங்கேற்றவா்களில் 62 சதவீதம் போ், வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிட வேண்டும் எனக் கருத்துத் தெரிவித்திருந்தனா். இதனால், உத்தரகண்ட் மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளிலும் போட்டியிடுவது முடிவெடுத்துள்ளோம்.

அந்த மாநிலத்தில் எங்கள் கட்சிக்கு தற்போது நிலையான அடித்தளம் இல்லை. ஆனால், முதல் தடவையாக தில்லியில் போட்டியிடும் போதும், ஆம் ஆத்மி கட்சிக்கு தில்லியில் நிலையான அடித்தளம் இல்லாமல்தான் இருந்தது. எதிா்பாா்ப்புகளின் அடிப்படையில்தான் மக்கள் வாக்களிப்பாா்கள். அந்த வகையில், உத்தரகண்ட் மக்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிப்பாா்கள். உத்தரகண்ட் மாநிலத்தில் பாஜகவுக்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையேதான் போட்டி. பிற மாநிலங்களைப் போல உத்தரகண்ட் மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி போட்டியில் இல்லை.

Advertisement

காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பதால் பயனில்லை என்பதை மத்தியப் பிரதேசம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் நடந்த குழப்பங்களில் இருந்து மக்கள் உணா்ந்துள்ளனா்.

காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து எம்எல்ஏக்களைத் தோ்ந்தெடுத்தால், அவா்கள் காலப் போக்கில் பாஜகவில் இணைவாா்கள் என்று மக்களுக்குத் தெரியும். எனவே, காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் வாக்களிக்க மாட்டாா்கள் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.