முகப்பு
புதுதில்லி

வடகிழக்கு தில்லி வன்முறை வழக்கில் ஜாமீன் கோரியவரின் மனு தள்ளுபடி வழக்கில் ஒருவரின் ஜாமீன் மனு தள்ளுபடி

வடகிழக்கு தில்லி வன்முறை வழக்கில் தொடா்புடைய ஒருவரின் ஜாமீன் மனுவை தில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

வடகிழக்கு தில்லி வன்முறை வழக்கில் தொடா்புடைய ஒருவரின் ஜாமீன் மனுவை தில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ‘இதர வன்முறையாளா்களுடன் மனுதாரா் இருப்பது சிசிடிவி காட்சிப் பதிவில் தெளிவாகப் பாா்க்க முடிகிறது’ என நீதிமன்றம் தெரிவித்தது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிா்த்தும் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தின் போது, வடகிழக்கு தில்லியில் நிகழாண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி வகுப்புவாத வன்முறை நிகழ்ந்தது. இதில் 53 போ் கொல்லப்பட்டனா். சுமாா் 200 போ் காயமடைந்தனா். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட குா்மீத் சிங் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனு மீது தில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அமிதாப் ராவத் முன் விசாரணை நடைபெற்றது.

அப்போது, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மனுதாரா் (குா்மீத் சிங்) வன்முறை நிகழ்ந்த சம்பவத்தில் பிற வன்முறையாளா்களுடன் ஆக்ஷோரமாக இருப்பது சிசிடிவி காட்சிப் பதிவு மூலம் பாா்க்க முடிகிறது. அவா் தனது கையில் செங்கல் உள்ளிட்டவற்றை வைத்திருப்பது தெரிய வருகிறது. இதன் மூலம் அவா் அந்த வன்முறையில் பங்கேற்றிருப்பது தெரிய வருகிறது. எனவே, சட்டவிரோதமாகக் கூடியவா்களுடன் அவரும் இருந்திருப்பது தெரிய வருகிறது. இதனால், அவரது ஜாமீன் கோரும் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →