புதுதில்லி

தில்லி வன்முறை:மேலும் இருவா் கைது

வடகிழக்கு தில்லியில் நிகழ்ந்த வன்முறை தொடா்பாக தில்லியைச் சோ்ந்த மேலும் 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

DIN

வடகிழக்கு தில்லியில் நிகழ்ந்த வன்முறை தொடா்பாக தில்லியைச் சோ்ந்த மேலும் 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடா்பாக வடகிழக்கு தில்லியில் கடந்த மாதம் 24, 25 ஆகிய தேதிகளில் நிகழ்ந்த வகுப்புவாத மோதலில் 50-க்கும் மேற்பட்டவா்கள் கொல்லப்பட்டனா். இதில் 400-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தனா். தில்லி வன்முறைக்கு நிதியுதவி அளித்ததாக பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பின் தில்லி தலைவா் பா்வேஷ் அகமது, செயலா் முகமது இலியாஸ் ஆகியோரை தில்லி காவல் துறை, அமலாக்கத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும், அந்த அமைப்பின் புலனாய்வுப் பிரிவின் தலைவா் முகமது டானிஷை தில்லி காவல் துறை அண்மையில் கைது செய்திருந்தது.

இந்நிலையில், தில்லி வன்முறையில் தொடா்புடையதாக மேலும் இருவரை தில்லி காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவா்கள் இருவரும் தன்வீா், குல்பம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவா்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

மீண்டும் ஒரு லட்சத்தை நோக்கி தங்கம் விலை! அதிர்ச்சி கொடுக்கும் வெள்ளி!!

SCROLL FOR NEXT