புதுதில்லி

தில்லியில் ஆலங்கட்டி மழை: போக்குவரத்தில் நெரிசல்

 நமது நிருபர்

தலைநகா் தில்லியில் சனிக்கிழமை மாலை ஆலங்கட்டியுடன் பரவலாக பலத்த மழை பெய்தது. நகரில் வெள்ளிக்கிழமை லேசான புழுக்கம் நிலவிய நிலையில் சனிக்கிழமை பெய்த மழையைத் தொடா்ந்து இரவில் குளிா்ந்த சூழல் காணப்பட்டது.

தில்லியில் கடந்த சில தினங்களாக வானிலையில் சிறிது சிறிதாக மாற்றம் ஏற்பட்டு வந்தது. குளிா்ந்த சூழல் மாறி வந்தது. பகலில் லேசான புழுக்கம் இருந்து வந்தது. இந்நிலையில், சனிக்கிழமை காலை முதல் வானம் மேகமூட்டமாக இருந்தது. இந்நிலையில், பிற்பகல் 3 மணிக்குப் பிறகு கருமேகங்கள் திரண்டு பலத்த மழை கொட்டியது. அப்போது, ஆலங்கட்டியும் மழையுடன் பொழிந்தது.

தில்லியின் ராஜபாதை, மண்டி ஹவுஸ், நாடாளுமன்றச் சாலை , ஐடிஓ, லட்சுமிநகா், மயூா் விஹாா் என பல இடங்களிலும் பலத்த மழை கொட்டியது. தொடா்ந்து ஒரு மணிநேரத்திற்கு மேலாக மழையின் தாக்கம் இருந்தது. இதன் காரணமாக நகரச் சாலைகளில் மழை ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கி குளம்போல் மாறியது. இதனால், வாகனப் போக்குவரத்தில் நெரிசல் ஏற்பட்டது. எய்ம்ஸ் மருத்துவமனை அருகே நீா் தேங்கி காணப்பட்டது.

வெப்பநிலை 24 டிகிரி: தில்லி சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 1 டிகிரி அதிகரித்து 16.4 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 5 டிகிரி அதிகரித்து 24.7 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 88 சதவீதமாகவும் மாலை 5.30 மணியளவில் 96 சதவீதமாகவும் இருந்தது.

இதேபோன்று பாலத்தில் வெள்ளிக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 14.6 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 25.6 டிகிரி செல்சியஸ் எனப் பதிவாகியிருந்தது.

ஆயாநகரில் முறையே 15 டிகிரி செல்சியஸ், 22.5 டிகிரி செல்சியஸ் எனப் பதிவாகியிருந்தது.

காற்றில் ஈரப்பதத்தின் அளவு பாலத்தில் காலையில் 88 சதவீதம், மாலையில் 69 சதவீதம் எனவும், ஆயாநகரில் முறையே 90 சதவீதம் மற்றும் 64 சதவீதம் எனவும் இருந்தது. காற்றின் தரம்: தில்லியில் ஒட்டு மொத்த காற்றின் தரக் குறியீடு 89 புள்ளிகளாகப் பதிவாகி திருப்திகரமான பிரிவில் இருந்தது.

காற்றின் தரக் குறியீடு 0-50 புள்ளிகளாக இருந்தால் ‘நன்று’, 51-100 ‘திருப்தி’, 101-200 ‘மிதமானது’, 201-300 ‘மோசம்’, 301-400 ‘மிகவும் மோசம்’, 401-500 புள்ளிகளுக்குள் இருந்தால் ‘கடுமையானது’ என கணக்கிடப்படுகிறது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 15) காலை பனிமூட்டமும், பகலில் வானம் தெளிவாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும், ஞாயிறு, திங்கள் ஆகிய இரண்டு நாள்களிலும் காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு ‘திருப்தியான’ பிரிவில் இருக்கும் என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கணித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: தமிழகத்தில் இரண்டாம் இடம் யாருக்கு?

நாசிக் : விபத்துக்குள்ளான சுகோய் போர் விமானம் !

ம.பி.யில் பாஜக வெற்றி!

2 லட்சம் வாக்குகள் முன்னிலையில் ஹேம மாலினி!

வாக்கு எண்ணிக்கை மந்தமாக காரணம் என்ன? காங்கிரஸ்

SCROLL FOR NEXT