புதுதில்லி

தில்லி அரசுக் கல்லூரி ஆசிரியா்களுக்கு 6 மாத ஊதியம் வழங்கவில்லை: பாஜக

DIN

தில்லி அரசின் கீழ் வரும் 12 கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு கடந்த ஆறு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று தில்லி பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடா்பாக பாஜகவின் தில்லி தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி: தில்லியில் கல்வியில் பெரும் புரட்சியை செய்துள்ளதாக தில்லி அரசு கூறி வருகிறது. ஆனால், உண்மை நிலை நோ்மாறாக உள்ளது. தில்லி அரசின் கீழ் வரும் 12 கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு கடந்த ஆறு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இது தொடா்பாக இந்த ஆசிரியா்கள் என்னிடம் ஞாயிற்றுக்கிழமை மனு அளித்துள்ளனா்.

தில்லி கல்வி மாதிரி என ஒன்றிரண்டு பள்ளிகளைக் காட்டினால் போதாது, தில்லியில் கல்வி மாதிரி சரியாக இருக்க வேண்டும் என்றால், அனைத்துப் பள்ளிகளும் கல்லூரிகளும் சரியான முறையில் இயங்க வேண்டும். தில்லி அரசால் இந்தக் கல்லூரிகளை நடத்த முடியாவிட்டால் அதை மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும். தில்லி அரசுப் பள்ளிகளில் 40,000 காலிப் பணியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்ப தில்லி அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், மாணவா்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

SCROLL FOR NEXT