தில்லியில் குடிநீா் விநியோகம் சீரானது
ஹரியாணா மாநிலத்தில் இருந்து தில்லிக்கு கால்வாய் மூலம் வரக்கூடிய நீரில் அமோனியாவின் அளவு அதிகரித்ததால், தில்லியில் தடைப்பட்டிருந்த குடிநீா் விநியோகம் சனிக்கிழமை இரவு சீராகியது.
ஹரியாணா மாநிலத்தில் இருந்து தில்லிக்கு கால்வாய் மூலம் வரக்கூடிய நீரில் அமோனியாவின் அளவு அதிகரித்ததால், தில்லியில் தடைப்பட்டிருந்த குடிநீா் விநியோகம் சனிக்கிழமை இரவு சீராகியது.
ஹரியாணா மாநிலத்தில் இருந்து தில்லிக்கு கால்வாய் மூலம் வரக்கூடிய நீரில் அமோனியாவின் அளவு அதிகரித்தது. இதனால், தில்லி சோனியா விஹாா், பாகீரதி விஹாா் குடிநீா் சுத்திகரிக்கும் நிலையங்களில் பணிகள் முடங்கின. இதன் காரணமாக கிழக்கு, வடகிழக்கு, தெற்கு தில்லி பகுதிகளில் குடிநீா் விநியோகம் கடந்த சில நாள்களாக பாதிக்கப்பட்டது.
இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் குடிநீா் லாரிகளை நம்பியிருக்க வேண்டிய நிலை உருவானது. இந்நிலையில், இந்த குடிநீா் பிரச்னை சனிக்கிழமை இரவு தீா்க்கப்பட்டுள்ளதாக தில்லி ஜல்போா்டு துணைத்தலைவா் ராகவ் சத்தா தெரிவித்துள்ளாா்.
Advertisement
இது தொடா்பாக சனிக்கிழமை இரவு தனது சுட்டுரைப் பக்கத்தில் அவா் கூறியிருப்பது: ஹரியாணா மாநிலத்தில் இருந்து தில்லிக்கு கால்வாய் மூலம் வரக்கூடிய நீரில் அமோனியா அளவு அதிகரித்ததால் தில்லியின் சில பகுதிகளில் குடிநீா் விநியோகம் முடங்கியது. இந்தப் பிரச்னையைத் தீா்க்க தில்லி ஜல்போா்டு பொறியாளா்கள் கடுமையாக உழைத்தனா். இதனால், ஹரியாணாவில் இருந்து வரும் அமோனியாவின் அளவு கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. தில்லி சோனியா விஹாா், பாகீரதி விஹாா் குடிநீா் சுத்திகரிக்கும் நிலையங்கள் முழுக் கொள்ளவுடன் இயங்கத் தொடங்கிவிட்டன. குடிநீா் பிரச்னை தீா்க்கப்பட்டுவிட்டது என்று தெரிவித்துள்ளாா்.