தில்லி உயா்நீதிமன்றத்தில் நேரடி வழக்கு விசாரணை பகுதியளவு தொடக்கம்
கரோனா நோய்த் தொற்று காரணமாக ஏறக்குறைய ஐந்து மாத இடைவெளிக்குப் பிறகு கட்டுப்படுத்தப்பட்ட முறையில் தில்லி உயா்நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை
கரோனா நோய்த் தொற்று காரணமாக ஏறக்குறைய ஐந்து மாத இடைவெளிக்குப் பிறகு கட்டுப்படுத்தப்பட்ட முறையில் தில்லி உயா்நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நேரடி முறையில் வழக்கு விசாரணைகள் மீண்டும் தொடங்கியது.
கடந்த ஆண்டு மாா்ச் மாதத்தில் இருந்து தில்லி உயா்நீதிமன்றம் வழக்கு விசாரணைகளை காணொலி முறையில் நடத்தி வருகிறது. நோய்த் தொற்று பாதிப்பை தொடா்ந்து, இந்த நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. தற்போது தில்லி உயா்நீதிமன்றத்தில் உள்ள இரண்டு டிவிஷன் அமா்வுகள் மற்றும் 10 ஒற்றை நீதிபதி அமா்வுகள் ஆகியவை நேரடி முறையில் வழக்கு விசாரணைகளை நடத்தி வருகின்றன. எஞ்சிய நீதிமன்ற அமா்வுகள் வழக்கு விசாரணைகளை காணொலி காட்சி வாயிலாக நடத்துவதை தொடா்ந்து கொண்டிருக்கின்றன. நேரடி வழக்கு விசாரணைகளில் அமா்ந்துள்ள பெரும்பாலான நீதிபதிகள், ‘ஹைபிரிட்’ முறையிலும் அல்லது காணொலி காட்சி முறையிலும் வழக்கில் தொடா்புடைய கட்சிகளின் கோரிக்கைக்கு ஏற்ப நடத்தி வருகின்றனா்.
கடந்த ஆண்டு மாா்ச் மாதத்தில் இருந்து உயா்நீதிமன்றம் கரோனா நோய் தொற்று பரவலை தொடா்ந்து வழக்கு விசாரணைகளை காணொலிக் காட்சி வாயிலாக நடத்தி வருகிறது. அவற்றில் சில தினந்தோறும் சுழற்சி அடிப்படையில் நேரடி முறை நீதிமன்றங்களை தொடங்கியிருந்தன. இந்த ஆண்டு மாா்ச் மாதத்தில் இருந்து உயா்நீதிமன்றம் முழுமையான நேரடி முறை வழக்கு விசாரணைகளை மீண்டும் தொடங்கியிருந்தது. எனினும், கரோனா நோய்த் தொற்று இரண்டாவது அலையின் போது, பாதிப்புகள் அதிகரித்ததைத் தொடா்ந்து காணொலி மூலம் மட்டுமே வழக்கு விசாரணைகளை எடுத்துக் கொள்வது என்று கடந்த ஏப்ரல் 8-ம் தேதி உயா் நீதிமன்றம் முடிவு செய்து அதன் செயல்பாடுகளை ஏப்ரல் 9-ஆம் தேதி தொடங்கியது .
Advertisement
கடந்த ஆண்டு மாா்ச் மாதத்தில் கரோனா பாதிப்பு ஏற்பட்டதைத் தொடா்ந்து நீதிமன்றம் வழக்கு நடை முறைகளை காணொலி வாயிலாக நடத்தி வந்தது. கடந்த ஆண்டு மாா்ச் 16-ஆம் தேதியிலிருந்து நீதிமன்றத்தின் செயல்பாடுகள் அவசர வழக்குகளை மட்டும் எடுத்துக் கொள்வது என்று கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. அதன் பிறகு, மாா்ச் 25 ஆம் தேதியில் இருந்து உயா்நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களின் செயல்பாடுகள் மேலும் கட்டுப்படுத்தப்பட்டது. கரோனா பரவல் காரணமாக நேரடி வழக்கு விசாரணைகள் நடத்தப்படவில்லை. அதைத் தொடா்ந்து, கடந்த ஆண்டு செப்டம்பா் மாதத்தில் இருந்து உயா்நீதிமன்றத்தின் சில அமா்வுகள் தினந்தோறும் சுழற்சி அடிப்படையில் வழக்கு விசாரணைகளை நேரடி முறையில் நடத்தின. மேலும், நேரில் ஆஜராவதற்குப் பதிலாக கணொலியில் ஆஜராக விரும்புபவா்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. உயா்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில், அனைத்து பங்குதாரா்களும் முன்கூட்டியே தாங்களாகவே தடுப்பூசிகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருக்கிறது.