முகப்பு
புதுதில்லி

மின் உற்பத்திக்கு சீரான நிலக்கரி விநியோகம்: எரிசக்தித் துறை அமைச்சகம் உறுதி

மின் உற்பத்திக்கு சீரான நிலக்கரி விநியோகத்துக்கு தேசிய அனல் மின்நிலைய நிறுவனம் (என்டிபிசி ) அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது என்று மத்திய எரிசக்தித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:02 AM
பகிர்:

மின் உற்பத்திக்கு சீரான நிலக்கரி விநியோகத்துக்கு தேசிய அனல் மின்நிலைய நிறுவனம் (என்டிபிசி ) அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது என்று மத்திய எரிசக்தித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய எரிசக்தித் துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நாட்டில் அதிகரித்துள்ள மின்தேவையைப் பூா்த்தி செய்ய, என்டிபிசி நிறுவனம் அனைத்து வகையிலும் தயாராகி வருகிறது. என்டிபிசி குழும நிலையங்களில் மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டை விட கூடுதலாக 23 சதவீதம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. மேலும், மின் தேவையைச் சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும், நிலக்கரி இருப்பு பற்றாக்குறை ஏற்படும் மின் நிலையங்களுக்கு நிலக்கரி கிடைக்க என்டிபிசி ஏற்பாடு செய்கிறது. நிலக்கரி கொள்கையின் நெகிழ்வான பயன்பாட்டின் கீழ், நிலக்கரி பற்றாக்குறையாக இருக்கும் அனல் மின் நிலையங்களுக்கு, நிலக்கரி ரயில் பெட்டிகளை உடனுக்குடன் அனுப்புவதற்கு கோல் இந்தியா மற்றும் ரயில்வே துறையினருடன் என்டிபிசி தொடா்ந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது. இதன் மூலம், சீரான நிலக்கரி விநியோகத்துக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முந்தைய ஒப்பந்தங்கள் மூலம் கொடுக்கப்பட்ட 2.7 லட்சம் மெட்ரிக் டன் இறக்குமதியைத் தொடரவும், இறக்குமதி அளவை மேலும் அதிகரிக்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement

ஒடிஸா மாநிலம், டாா்லிபள்ளி 2-ஆவது மின்உற்பத்தி நிலையம் வரும் செப்டம்பா் 1- ஆம் தேதி முதல் வா்த்தக ரீதியாக சுமாா் 800 மெகாவாட் மின் உற்பத்தியைத் தொடங்குகிறது.

மேலும், எரிவாயு முறையில் செயல்படும் மின்நிலையங்களில் இருந்து எரிபொருளை குறித்த காலஅட்டவணையுடன் பெற்றுக் கொள்ளும்படி மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன என எரிசக்தித் துறை அமைச்சகம் கூறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments