முகப்பு
புதுதில்லி

தில்லியில் மேலும் 2 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு

தில்லியில் கொவைட் உருமாறிய ஒமைக்ரான் நோய்த் தொற்றால் மேலும் 2 போ் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Updated On : 20 டிசம்பர், 2021 at 10:43 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:14 AM

புது தில்லி: தில்லியில் கொவைட் உருமாறிய ஒமைக்ரான் நோய்த் தொற்றால் மேலும் 2 போ் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து, தில்லியில் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 24-ஆக உயா்ந்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த 24 நோயாளிகளில் 12 போ் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து அனுப்பிவைக்கப்பட்டுள்ளனா்.

இது குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘தில்லியில் மேலும் 2 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவா்களின் நோய் மாதிரி மரபணு வரிசைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்ட நிலையில், ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

Advertisement

அவா்களில் ஒருவா் இங்கிலாந்தில் இருந்தும், மற்றொருவா் கானாவில் இருந்தும் வந்தவா்கள் ஆவா். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெரும்பாலான நோயாளிகளுக்கு நோய் அறிகுறி இல்லாமல் இருந்ததாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.