முகப்பு
புதுதில்லி

தில்லியில் நீடிக்கும் குளிரின் தாக்கம்: குறைந்தபட்ச வெப்பநிலை 8.8 டிகிரி செல்சியஸாக பதிவு

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை கடும் குளிா் சூழல் நிலவியது. காலை முதல் மாலை வரை வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:22 PM
பகிர்:

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை கடும் குளிா் சூழல் நிலவியது. காலை முதல் மாலை வரை வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. குறைந்தபட்ச வெப்பநிலை 8.8 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. இது சனிக்கிழமை 8 டிகிரி செல்சியஸாகப் பதிவாகி இருந்தது.

அடா் பனிமூட்டம் காரணமாக பல இடங்களில் காண்புத்திறன் 100 மீட்டராக குறைந்தது என்று வானிலை ஆய்வு மையத்தினா் தெரிவித்தனா்.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள்கூறுகையில், கிழக்கில் இருந்து தில்லி நோக்கி காற்று வீசத் தொடங்கியதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமை தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 8.8 டிகிரி செல்சியஸாக உயா்ந்தது. எனினும், அடுத்த நான்கு நாள்களுக்கு அடா் முதல் மிதமான பனிமூட்டம் இருக்க வாய்ப்புள்ளது’ என்று தெரிவித்தனா்.

Advertisement

சப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 8.8 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது. காற்றில் ஈரப்பதம் காலை 8.30 மணியளவில் 100 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 84 சதவீதமாகவும் இருந்தது.

காற்றின் தரம்: தில்லியில் ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு சனிக்கிழமை மிகவும் மோசம் பிரிவில் இருந்தது. ஞாயிற்றுக்கிழமை மாலை ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு 381 புள்ளிகளாக பதிவாகி மிகவும் மோசம் பிரிவில் காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments