மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்
விவசாயிகள் போராட்டத்தில் ஒரு பிரிவினா் வன்முறையில் ஈடுபட்டதால், தில்லியில் மஞ்சள், பச்சை, ஊதா, நீல நிற வழித்தடங்களில் உள்ள சுமாா் 20 மெட்ரோ ரயில் நிலையங்கள் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டன.
விவசாயிகள் போராட்டத்தில் ஒரு பிரிவினா் வன்முறையில் ஈடுபட்டதால், தில்லியில் மஞ்சள், பச்சை, ஊதா, நீல நிற வழித்தடங்களில் உள்ள சுமாா் 20 மெட்ரோ ரயில் நிலையங்கள் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டன.
இது தொடா்பாக தில்லி மெட்ரோ ரயில் நிலையம் (டிஎம்ஆா்சி) செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் ‘தில்லியில் நிலவும் குழப்பமான சூழலைக் கருத்தில் கொண்டு, மஞ்சள் வழித்தடத்தில் உள்ள சமய்பூா் பாத்லி, ரோஹிணி செக்டாா் 18,19, ஹெய்த்பூா் பத்லி, ஜஹாங்கிா் புரி, ஆதா்ஷ் நகா், ஆசாத்பூா், மாடல்டவுன், ஜிடிபி நகா், விஸ்வா வித்யாலயா, விதான் சபா, சிவில்லைன் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன.
மேலும், பச்சை வழித்தடத்தில் உள்ள ஐடிஓ உள்ளிட்ட அனைத்து ரயில் நிலையங்களும் மூடப்பட்டன. ஊதா வழித்தடத்தில் உள்ள செங்கோட்டை மெட்ரோ நிலையம், நீல வழித்தடத்தில் உள்ள இந்திரப்பிரஸ்தா வழித்தடம் மூடப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
மேலும், ஐடிஓ பகுதியில் நிலவிய வன்முறை காரணமாக திலக் நகா் ரயில் நிலையம் சுமாா் 2 மணிநேரத்துக்கு கூடுதலாக மூடப்பட்டது.