முகப்பு
புதுதில்லி

தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 5.4 டிகிரி செல்சியஸாகப் பதிவு

தில்லியில் குளிரின் தாக்கம் நீடித்து வரும் நிலையில் புதன்கிழமை சப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை வழக்கமான அளவைவிட 3 புள்ளிகள் குறைந்து 5.4 டிகிரி செல்சியஸாகப் பதிவானது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:23 PM
பகிர்:


புது தில்லி: தில்லியில் குளிரின் தாக்கம் நீடித்து வரும் நிலையில் புதன்கிழமை சப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை வழக்கமான அளவைவிட 3 புள்ளிகள் குறைந்து 5.4 டிகிரி செல்சியஸாகப் பதிவானது.

தில்லியில் காலை வேளையில் மிதமான பனிமூட்டம் இருந்தது. எனினும், பகலில் மிதமான வெயிலின் தாக்கம் இருந்தது.

சப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை செவ்வாய்க்கிழமை 2.1 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்த நிலையில், புதன்கிழமை 5.4 டிகிரி செல்சியஸாகப் பதிவானது.

Advertisement

அதிகபட்ச வெப்பநிலை 21.1 டிகிரி செல்சியாஸாகப் பதிவாகி இருந்தது.

காற்றின் தரம்: தில்லியில் ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு புதன்கிழமை மிகவும் மோசம் பிரிவில் இருந்தது. மாலை ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு 330 புள்ளிகளாக பதிவாகி மிகவும் மோசம் பிரிவில் காணப்பட்டது.

தில்லியில் அடுத்த 2 நாள்களில் குறைந்தபட்ச வெப்பநிலை நான்கு டிகிரிகளாக குறையக் கூடும். மேலும், அதிகபட்ச வெப்பநிலை 16 டிகிரி செல்சியஸாக பதிவாக வாய்ப்புள்ளது. மிதமான பனியில் இருந்து அடா் பனிமூட்டம் வரை இருக்கும். மேற்கு இமயமலைப் பகுதியில் குளிா் காற்று வீசுவதால் இரு தினங்கள் குளிா் அலைக்கு வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறைந்தபட்ச வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸுக்கு கீழே குறைந்தால் குளிா் அலை அறிவிக்கப்படுவது வழக்கம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments