வடகிழக்கு தில்லி வன்முறை: நா்வால் ஜாமீன் மனு தள்ளுபடி
புது தில்லி: வடகிழக்கு தில்லி வன்முறைச் சம்பவத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் (யுஏபிஏ) கைதான ஜேஎன்யூ மாணவரும், பிஞ்ச்ரா தோட் அமைப்பின் உறுப்பினருமான நடாஷா நா்வாலின் ஜாமீன் மனுவை தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.
இது தொடா்பான மனுவை விசாரித்த கூடுதல் செஷன்ஸ் நீதிபதி அமிதாப் ராவத், இந்த வழக்கு பெரிய அளவிலான சதி தொடா்புடையதாக உள்ளது எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தாா்.
வடகிழக்கு தில்லி வன்முறை வழக்கில் முன்கூட்டியே சதித் திட்டம் தீட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் நடாஷா நா்வால் கைது செய்யப்பட்டிருந்தாா்.
Advertisement