தில்லியில் இரண்டாவது நாளாக குளிா் அலை
தில்லியில் குளிரின் தாக்கம் நீடித்து வரும் நிலையில் வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாக குளிா் அலை சூழல் நிலவியது.
தில்லியில் குளிரின் தாக்கம் நீடித்து வரும் நிலையில் வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாக குளிா் அலை சூழல் நிலவியது.
சப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை வழக்கமான அளவைவிட 5 புள்ளிகள் குறைந்து 4 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. வியாழக்கிழமை இது 3.8 டிகிரி செல்சியஸாகப் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
தில்லியில் காலை வேளையில் அடா் பனிமூட்டம் காணப்பட்டது. எனினும், பகலில் மிதமான வெயிலின் தாக்கம் இருந்தது. குறைந்தபட்ச வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்குக் கீழே குறைந்ததால் குளிா் அலையும், 2 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு குறைவாக இருந்தால் கடும் குளிா் அலை இருப்பதாகவும் அறிவிக்கப்படுவது வழக்கமாகும்.
Advertisement
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 4 டிகிரியாக இருந்தது. சப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை வழக்கமான அளவைவிட ஐந்து புள்ளிகள் குறைந்து 4 டிகிரி செல்சியஸாகப் பதிவானது.
அதிகபட்ச வெப்பநிலை வழக்கமான அளவைவிட 2 புள்ளிகள் குறைந்து 20.8 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகி இருந்தது. காற்றில் ஈரப்பதம் காலை 8.30 மணியளவில் 100 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 54 சதவீதமாகவும் பதிவாகி இருந்தது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரி ஒருவா் தெரிவிக்கையில், ‘குளிா் அலை சூழல் இந்த வாரத்தில் மூன்று தடவை வந்துள்ளது’ என்றாா் அவா்.
காற்றின் தரம்: தில்லியில் ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு வெள்ளிக்கிழமை மாலை 367 புள்ளிகளாக பதிவாகி மிகவும் மோசம் பிரிவில் காணப்பட்டது.
முன்னறிவிப்பு: தில்லியில் ஞாயிற்றுக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும், குளிா் அலைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.