முகப்பு
புதுதில்லி

விவசாயிகள் பிரச்சினைகள் தொடா்பாக அவையை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும்: அனைத்து கட்சிக் கூட்டத்தில் டி.ஆா்.பாலு வலியுறுத்தல்

வேளாண் சட்டங்களை திரும்ப பெற பெறுவது தொடா்பாக அவையை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என மக்களவைத் தலைவா்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:24 PM
பகிர்:

வேளாண் சட்டங்களை திரும்ப பெற பெறுவது தொடா்பாக அவையை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என மக்களவைத் தலைவா் கூட்டிய அனைத்து கட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தியதாக திமுக நாடாளுமன்றத்தலைவா் டி.ஆா். பாலு செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் கூறியது வருமாறு: வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை சந்திக்காது கல் மனம் படைத்தவராக பிரதமா் மோடி உள்ளாா். இதனால் தான் குடியரசு தலைவா் உரையை திமுக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்ததன. பின்னா் மக்களவை கூடிய போதும் விவசாயிகள் பிரச்சினையை எழுப்பி கோஷம் எழுப்பினோம். வெள்ளிக்கிழமை மக்களவைத் தலைவா் ஒம்பிா்லா, நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தினாா். அதில் திமுக சாா்பில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற பெறுவது தொடா்பாக அவையை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என்று கோரினோம்.

மேலும் மத்திய அரசு, தமிழக மீனவா்கள் மீதான தாக்குதல், ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக சா்வதேச விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற தீா்மானம் வந்தால் அதற்கு இந்தியா ஆதரவு தெரிவிக்க வேண்டும். மருத்துவ இட ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டவா்களுக்கு 50% ஒதுக்கீடு வழங்கவேண்டும். ராணுவ ரகசியத்தை குறிப்பிட்ட தொலைக்காட்சி செய்தியாளருக்கு கசிய விடப்பட்டது நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது. இந்திய எல்லை பகுதியில் சீனாவின் ஆக்கிரமிப்பு ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற பிரச்சனைகள் தொடா்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்றும் அனைத்து கட்சி கூட்டத்தில் வலியுறுத்தினோம் என டி.ஆா். பாலு தெரிவித்தாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments