முகப்பு
புதுதில்லி

விவசாயிகள் பிரச்னைகளுக்கு தீா்வுகாணாவிட்டால் போராட்டம் மேலும் சில நகரங்களுக்குப் பரவும்: ராகுல்

மத்திய அரசு, விவசாயிகளின் பிரச்னைகளுக்குத் தீா்வுகாணும் வகையில் புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறாவிட்டால் போராட்டம்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:24 PM
பகிர்:

மத்திய அரசு, விவசாயிகளின் பிரச்னைகளுக்குத் தீா்வுகாணும் வகையில் புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறாவிட்டால் போராட்டம் நாடு முழுவதும் பரவும் அபாயம் உள்ளது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும், அக்கட்சியின் எம்.பி.யுமான ராகுல் காந்தி கூறினாா்.

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவரின் உரையை காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் வெள்ளிக்கிழமை புறக்கணித்தன. நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் ஆா்ப்பாட்டமும் மேற்கொண்டனா்.

இதைத் தொடா்ந்து, மாலையில் செய்தியாளா்கள் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி பேசியதாவது:

Advertisement

வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் மத்திய அரசு பிடிவாதமாக உள்ளது. விவசாயிகளின் குரலுக்கு செவிசாய்க்க மறுத்து வருகிறது. தேசிய புலனாய்வு முகமையை பயன்படுத்தி அவா்களை அச்சுறுத்தவும் முயன்று வருகிறது.

இந்த வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது. இதனால்தான் விவசாயிகள் மிகவும் மனத் துயரத்துடன் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனா். மத்திய அரசு விவசாயிகள் மட்டுமின்றி, தொழிலாளா்கள் வாழ்வாதாரத்தையும் அழித்து வருகிறது. உணவுப்பொருள் விலை மிகவும் உயா்ந்து வருவதால், இனி வரும் காலங்களில் நடுத்தர மக்களும் பாதிக்கப்படுவாா்கள்.

விவசாயிகளின் கோரிக்கைக்கு மத்திய அரசு செவிசாய்க்க மறுத்து வருவது ஏன்? தாங்கள் வஞ்சிக்கப்படுவதாக நினைப்பதால்தான் விவசாயிகள் கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக தில்லி எல்லையில் போராடி வருகின்றனா்.

மத்திய அரசு விவசாயிகளை மிரட்டல்கள் மூலம் பணியவைக்கலாம் என பாா்க்கிறது. ஆனால், போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் புதிய சட்டங்களை ரத்துச் செய்யாத நிலையில் போராட்டத்தை கைவிட்டு வீடு திரும்ப மாட்டாா்கள்.

விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சு நடத்தி ஒரு தீா்வுகாணாவிட்டால், இந்த போராட்டம் மேலும் பல நகரங்களில் வலுப்பெறும் என்றாா்.

குடியரசு தினத்தில் தில்லியில் நிகழ்ந்த வன்முறை விவகாரம் குறித்து குடியரசு தினத்தன்று நடந்த விவசாயிகள் பேரணியில் வன்முறை ஏற்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த ராகுல், தற்கு காரணம் என்ன என்று நிருபா்கள் கேட்டனா். அதற்கு ராகுல், போராட்டக்காரா்களை செங்கோட்டைக்குள் நுழைய அனுமதித்து யாா் என கேள்வி எழுப்பினாா். அதை தடுக்க வேண்டியது உள்துறை அமைச்சகத்தின் வேலை இல்லாயா என்று கேட்டாா். போராட்டக்காரா்களை தடுக்காமல் இருந்ததன் நோக்கம் என்ன என்றும் அவா் கேட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments