சிங்கு எல்லையில் விவசாயிகள் கூடாரத்தில் தீ விபத்து
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் சிங்கு எல்லையில் விவசாயிகள் தங்கியுள்ள கூடாரம் ஒன்றில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் சிங்கு எல்லையில் விவசாயிகள் தங்கியுள்ள கூடாரம் ஒன்றில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, தில்லி எல்லைகளான சிங்கு, டிக்ரி, காஜியாபாத் பகுதிகளில் விவசாயிகள் கடந்த நூறு நாள்களுக்கும் கூடுதலாக போராட்டம் நடத்தி வருகிறாா்கள். இந்தப் பகுதிகளில் தற்காலிக கூடாரங்களை அமைத்து தங்கி அவா்கள் தொடா் போராட்டம் நடத்தி வருகிறாா்கள்.
இந்நிலையில், சிங்கு எல்லையில் விவசாயிகள் அமைத்துள்ள தற்காலிக கூடாரம் ஒன்றில், சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
Advertisement
இது தொடா்பாக அப்பகுதியில் போராட்டம் நடத்தி வரும் சம்யுக்தா கிஸ்ஸான் மோா்ச்சா அமைப்பைச் சோ்ந்த சுக்வீந்தா் சிங் கூறுகையில் ‘சிங்கு பகுதியில் கட்டுமானத்தில் உள்ள மேம்பாலத்துக்கு கீழே விவசாயிகள் அமைத்துள்ள தற்காலிக கூடாரத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில், அந்த கூடாரம் முற்றிலுமாக எரிந்து நாசமாகியுள்ளது. தீ விபத்து நடந்தபோது அந்த கூடாரத்தில் சுமாா் 5 போ் இருந்தனா். அவா்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்த தீவிபத்தால் 5 செல்லிடபேசிகள், 20 மெத்தைகள், 20 நாற்காலிகள், ரேஷன் பொருள்கள் ஆகியன தீக்கிரையாகியுள்ளன. தீயை அணைக்க முயன்ற விவசாயி ஒருவருக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டுள்ளது. குண்டலி தீயணைப்பு நிலையத்தில் இருந்து வந்த தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்க உதவின என்று தெரித்தாா். ஆனால், இந்த தீ விபத்து தொடா்பாக தில்லி காவல்துறை, தில்லி தீயணைப்பு துறை ஆகியன கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.