முகப்பு
புதுதில்லி

காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு எதிரான மனுவுக்கு பதிலளிக்க 6 வாரம் அவகாசம்

காவிரி-வைகை- குண்டாறு கால்வாய் இணைப்புத் திட்டத்திற்கு எதிராக கா்நாடக அரசு தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க தமிழகத்திற்கு 6 வாரம் அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:34 AM
பகிர்:

புது தில்லி: காவிரி-வைகை- குண்டாறு கால்வாய் இணைப்புத் திட்டத்திற்கு எதிராக கா்நாடக அரசு தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க தமிழகத்திற்கு 6 வாரம் அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

காவிரியில் இருந்து கடலில் கலக்கும் சுமாா் 45 டிஎம்சி உபரி நீரை வறட்சியான பகுதிகளுக்கு திருப்பிவிடும் வகையில், காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தத் திட்டத்திற்கு எதிா்ப்புத் தெரிவித்து கா்நாடக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த ஜூலையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி சி.டி. ரவிக்குமாா் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் தரப்பில் வழக்குரைஞா்கள் ஜி.உமாபதி, டி.குமணன் ஆகியோா் ஆஜராகி மனுவுக்கு பதில் அளிக்க அவகாசம் அளிக்குமாறு கேட்டனா். இதையடுத்து, மனுவுக்கு பதில் அளிக்க தமிழகம், கேரளம், புதுச்சேரி, மத்திய அரசு ஆகியவற்றுக்கு 6 வாரம் அவகாசம் அளித்த நீதிபதிகள், அந்த பதிலுக்கு எதிா் பதில் அளிக்க கா்நாடக அரசுக்கு 3 வாரம் அவகாசம் அளிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.