முகப்பு
தமிழ்நாடு

புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம்

பாஜக வேட்பாளர்கள் பட்டியலில் புதிய நீதிக் கட்சிக்கு தொகுதி ஒதுக்காதது பற்றி...

Updated On : 3 ஏப்ரல், 2026 at 12:29 PM
பியூஷ் கோயலுடன் ஜி.கே. வாசன், நயினார் நாகேந்திரன், ஏ.சி. சண்முகம் - கோப்புப்படம்
பகிர்:

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியான நிலையில் புதிய நீதிக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படவில்லை.

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் புதிய நீதிக் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதிமுகவின் இரட்டை இலையில் ஒரு தொகுதியிலும் பாஜகவின் தாமரை சின்னத்தில் ஒரு தொகுதியிலும் போட்டியிடுவோம் என்று அக்கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் கூறியிருந்தார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் புதிய நீதிக் கட்சி சார்பில் மதுரை மத்திய தொகுதியில் நடிகரும் இயக்குநருமான சுந்தர். சி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் ஒதுக்கப்பட்ட இத்தொகுதியில் சுந்தர். சி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு தொகுதியை பாஜக அறிவிக்கும் என்று கூறப்பட்ட நிலையில் இன்று வெளியான பாஜக வேட்பாளர்கள் பட்டியலில் புதிய நீதிக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படவில்லை.

கூட்டணியில் உள்ள தென்னிந்திய பார்வார்டு பிளாக் கட்சிக்கு மட்டும் திருப்பத்தூர் தொகுதியில் வேட்பாளர் திருமாறன் அறிவிக்கப்பட்டார்.

இதையடுத்து புதிய நீதிக் கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்படாதது குறித்து அக்கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் செய்தியாளர்களுடன் பேசுகையில்,

'பாஜக எங்களுக்கு மிகவும் சவாலான ஒரு தொகுதியை ஒதுக்கினார்கள். அதனால் நானே அந்த தொகுதியை பாஜகவுக்கு விட்டுக்கொடுத்துவிட்டேன். பாஜக போட்டியிடுவதற்காக நான் ஒரு தொகுதியை விட்டுக்கொடுத்திருக்கிறேன். பாஜகவில் நல்ல வேட்பாளரை நிறுத்தியுள்ளார்கள். நானே வேட்பாளரை பரிந்துரை செய்தேன். அந்த தொகுதியில் பாஜக நிச்சயம் வெற்றி பெறும். புதிய நீதிக் கட்சி ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுகிறது" என்றார்.

summary

puthiya needhi katchi leader AC shanmugam clarification on why bjp not allocated one seat

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.