FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சி.வி. சண்முகம் வெற்றியை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!

சி.வி. சண்முகம் வெற்றியை எதிர்த்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது பற்றி...

13 அக்டோபர் 2026, 11:21 am IST
சி.வி. சண்முகம். - கோப்புப்படம்
பகிர்:

அதிமுக எம்.எல்.ஏ. சி.வி. சண்முகத்தின் வெற்றியை எதிர்த்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், மைலம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு, 30,041 வாக்குகள் வித்தியாசத்தில் சி.வி.சண்முகம் வெற்றி பெற்றிருந்தார்.

இந்த நிலையில், சி.வி. சண்முகத்தின் வெற்றியை எதிர்த்து மைலம் தொகுதி வாக்காளர் கமலக்கண்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Advertisement

Advertisement

இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி சி.வி. சண்முகம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன் அமர்வு, சி.வி. சண்முகத்தின் கோரிக்கையை ஏற்று, கமலக்கண்ணன் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்தார்.

summary

Case challenging ADMK C.V. Shanmugam's victory dismissed

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments