முகப்பு

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக வெற்றியை எதிர்த்து வழக்கு!

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளின் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தவெக எம்எல்ஏக்களின் வெற்றியை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறித்து...

25 வினாடிகள் முன்பு
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக வெற்றியை எதிர்த்து வழக்கு!
சென்னை உயர் நீதிமன்றம் - (கோப்புப்படம்)
பகிர்:

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளின் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தவெக எம்எல்ஏக்களின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற மரகதம் குமாரவேல், சத்தியபாமா ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.

இதையடுத்து, இந்த தொகுதிகளுக்கு கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அக்டோபர் 9-ஆம் தேதி நடந்த வாக்கு எண்ணிக்கையில் இரு தொகுதிகளிலும், தவெக சார்பில் போட்டியிட்ட மரகதம் குமாரவேல், சத்தியபாமா ஆகியோர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இவர்கள் இருவரின் வெற்றியை எதிர்த்து தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தாராபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட கே. பானுமதியும், மதுராந்தகம் தொகுதியின் வாக்காளர் எஸ். உமாபதி என்பவரும் இந்த தேர்தல் வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுக்களுக்கான எண்ணிடும் நடைமுறைகள் முடிவடைந்தப் பிறகு, இரு வழக்குகளும் விசாரணைக்குப் பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

summary

Election petitions have been filed in the Madras High Court challenging the victories of the TVK MLAs who won the by-elections in the Maduranthagam and Dharapuram constituencies.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.