FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

திமுகவின் 26 வயது இளம் வேட்பாளரை எதிர்த்துக் களமிறங்கிய எல். முருகன்!

திமுகவின் 26 வயது இளம் வேட்பாளரை எதிர்த்து பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் எல். முருகன் போட்டியிடுவதைப் பற்றி...

Updated On : 3 ஏப்ரல் 2026, 6:05 pm IST
கோகிலா மணி - எல். முருகன். - படம்: எக்ஸ்.
பகிர்:

திமுகவின் 26 வயதான இளம் வேட்பாளரை எதிர்த்து மத்திய இணையமைச்சரும், பாஜக முன்னாள் மாநிலத் தலைவருமான எல். முருகன் களமிறக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் சூடிபிடித்திருக்கும் நிலையில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

பாஜகவின் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், பாஜக சார்பில் இன்று வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிடும் தொகுதிதான் இழுபறியாக இருந்து வந்ததாகக் கூறப்பட்டு வந்த நிலையில், அவரது பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை.

Advertisement

Advertisement

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சாத்தூர் தொகுதியில், மயிலாப்பூரில் முன்னாள் ஆளுநரும் பாஜக மூத்த தலைவருமான தமிழிசை, கோவை வடக்கில் எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, பாஜகவில் இணைந்து, நீண்ட காலமாக பதவிக்காகக் காத்திருந்த விஜயதரணிக்கு, விளவங்கோடு தொகுதியில் போட்டியிட பாஜக சார்பில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் அவிநாசி தொகுதியில் இதுவரை அதிமுக எட்டு முறை வெற்றி பெற்றிருக்கிறது. அவிநாசி தொகுதியில் இருந்து கடந்த இரண்டு முறை எம்.எல்.ஏ வாக தேர்வான தனபால், அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்டு, இந்த முறை கூட்டணிக் கட்சியான பாஜகவுக்கு அவிநாசி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் எல். முருகன் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், அவிநாசி தொகுதியில் வெறும் 26 வயதான திமுக வேட்பாளரான மருத்துவர் கோகிலாமணியை எதிர்த்து அவர் போட்டியிடவுள்ளதால், இந்தத் தொகுதியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

திமுக வேட்பாளர் பட்டியலில் கோகிலா மணிதான் வேட்பாளர்களில் குறைந்த வயதுள்ளவர். எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்பு படித்துள்ள இவர், மூன்று ஆண்டுகள் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி, பின் கடந்தாண்டு ஆகஸ்ட் முதல் அவிநாசி வட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலைய அரசு மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

முதல்முறையாகப் போட்டியிடும் கோகிலாவுக்கு திமுக தலைமை வாய்ப்பு வழங்கியிருக்கிறது. திமுக - பாஜக நேருக்கு நேர் மோதும் இந்தத் தொகுதியில் மத்திய இணையமைச்சராகவும், பாஜக முன்னாள் மாநிலத் தலைவராகவும் இருக்கும் எல். முருகனை அவர் வீழ்த்துவாரா? என எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

summary

Union Minister of State and former BJP State President L. Murugan has been fielded against the DMK's 26-year-old young candidate.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments