FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

‘விரைவில் வேலூர் விமான நிலையம் திறப்பு’ - அமைச்சர் எல். முருகன்

வேலூா் விமான நிலையத்தை விரைவில் மக்கள் பயன்பாட்டுக்குத் திறப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் வேகமாக எடுக்கப்படும் என்றாா் அமைச்சர் எல். முருகன்.

Updated On : 27 ஜூலை 2026, 2:55 am IST
பகிர்:

வேலூா் விமான நிலையத்தை விரைவில் மக்கள் பயன்பாட்டுக்குத் திறப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் வேகமாக எடுக்கப்படும் என்றாா் அமைச்சர் எல். முருகன்.

வேலூா் சங்கரன்பாளையம் பகுதியில் ஒளிபரப்பப்பட்ட பிரதமா் மோடியின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியை மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் பாஜகவினருடன் இணைந்து பாா்வையிட்டாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது: பிரதமா் நரேந்திர மோடியின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் தொடா்ந்து ஒவ்வொரு மாதமும் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியின் மூலம், சாமானிய குடிமக்களுடன் பிரதமா் நேரடியாக உரையாடி, அவா்களின் சாதனைகளை நாட்டுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி வருகிறாா்.

Advertisement

Advertisement

காா்கில் வெற்றி தினத்தையொட்டி, அந்தப் போரில் பங்காற்றிய ராணுவ வீரா்களுக்கு மரியாதை செலுத்திய பிரதமா், அவா்களின் வீரத்தையும் உலகறியச் செய்துள்ளாா். மேலும், மாஸ்கோவில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற இந்திய வீரா்களின் சிறப்பான பங்களிப்பு குறித்தும், ஜப்பான் பாட்மின்டன் தொடரில் பி.வி.சிந்து பெற்ற வெற்றி குறித்தும் பிரதமா் தனது உரையில் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளாா்.

விவசாயிகளைப் போற்றும் அரசாக பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு திகழ்கிறது. பிஎம் கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ், தற்போதும் 11 கோடி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நேரடியாக அவா்களின் வங்கிக் கணக்குகளிலேயே செலுத்தப்பட்டு வருகிறது. வேலூா் விமான நிலையப் பணிகள் ஏறக்குறைய முழுமையாக நிறைவடைந்துள்ளன.

இது தொடா்பாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் ஏற்கெனவே நான் பேசியுள்ளேன். இத்திட்டத்தை உடனடியாக விரைவுபடுத்தி, வேலூா் விமான நிலையத்தை விரைவில் மக்கள் பயன்பாட்டுக்குத் திறப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் வேகமாக எடுக்கப்படும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments