எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்
பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியது பற்றி...
எந்தத் திட்டங்களைக் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும் என்று பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
சென்னை பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை முதல்வர் விஜய் சமீபத்தில் ரத்து செய்து உத்தரவிட்டார். இதற்கு திமுக மட்டும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து பரந்தூருக்கு பதிலாக ஓசூரில் விமான நிலையம் கொண்டுவரும் திட்டம் உள்ளதாக தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்தார்.
Advertisement
Advertisement
இந்நிலையில் இன்று பேரவையில் இதுபற்றி பேசிய அதிமுக எம்எல்ஏ பாலகிருஷ்ண ரெட்டி, "ஒசூரில் விவசாய நிலங்களை எடுத்து விமான நிலையம் கட்டக் கூடாது. பரந்தூர் போல ஒசூர் விவசாயிகளின் குரலையும் அரசு கேட்க வேண்டும். விவசாயிகளின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள வேண்டும். ஓசூரில் விமான நிலையம் கொண்டுவரும் திட்டத்தைக் கைவிட வேண்டும்" என்று பேசினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், "எந்தத் திட்டங்களைக் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும். வேறு வழி கிடையாது. அதேநேரத்தில் பொருளாதாரம் வளர்வதற்கு ஓசூரில் விமான நிலையம் கொண்டு வந்தால் வளர்ச்சி உருவாகும்" என்று தெரிவித்தார்.
விவசாயிகளுக்கு ஆதரவாக தவெக அரசு இருக்கும் என்று முதல்வரும் அமைச்சர்களும் கூறிவரும் நிலையில் செங்கோட்டையன் பேசியது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
No matter what project is introduced, agricultural land has to be acquired: Sengottaiyan
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.