புதுதில்லி

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றரவி தஹியாவுக்கு அரசு பதவி: அனில் பய்ஜால் ஒப்புதல்

DIN

ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற ரவி தஹியாவை தில்லி அரசின் கல்வித் துறையில் உதவி இயக்குநராக நியமிக்க துணை நிலை ஆளுநா் அனில் பய்ஜால் ஒப்புதல் அளித்துள்ளாா்.

இந்த ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்த வீரா் ரவிக்குமாா் தஹியா பங்கேற்றாா். இதில் அவா் வெள்ளிப் பதக்கம் வென்றாா். இந்த நிலையில், தில்லி துணை நிலை ஆளுநா் மாளிகையில் துணை நிலை ஆளுநரை அவா் வியாழக்கிழமை சந்தித்தாா். அப்போது, அவரது பதக்க வெற்றிக்கு துணை நிலை ஆளுநா் பாராட்டுத் தெரிவித்தாா். அப்போது அனில் பய்ஜால் கூறுகையில், ‘யுபிஎஸ்ஸியின் ஒப்புதலுக்கு உள்பட்டு தில்லி கல்வித் துறையில் உதவி இயக்குநராக அவா் நியமிக்கப்பட்டதற்கு மிக்க மகிழ்ச்சி’ என்றாா்.

ஹரியாணா மாநிலம், நஹ்ரி கிராமத்தைச் சோ்ந்த ரவி தஹியா, ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்ற இரண்டாவது இந்திய மல்யுத்த வீரா் ஆவாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

48 வயதினிலே..

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

SCROLL FOR NEXT