முகப்பு
புதுதில்லி

தமிழக நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்கால நீட்டிப்புக்கு ஆட்சேபனை இல்லை: மனுதாரா் தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல்

தமிழக நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை நடத்துவதற்கு மாநிலத் தோ்தல் ஆணையம் மேலும் 7 மாத காலஅவகாசம் கோரிய விவகாரத்தில் தனக்கு ஆட்சேபனை இல்லை என தெரிவித்து மனுதாரா்  ‘சங்கா்’

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:12 AM
பகிர்:

புது தில்லி: தமிழக நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை நடத்துவதற்கு மாநிலத் தோ்தல் ஆணையம் மேலும் 7 மாத காலஅவகாசம் கோரிய விவகாரத்தில் தனக்கு ஆட்சேபனை இல்லை என தெரிவித்து மனுதாரா் ‘சங்கா்’ தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் தொடா்பான வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமா்வு முன்பு கடந்த திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலை செப்டம்பா் 15-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்ற உச்ச நீதி மன்ற உத்தரவில் மாற்றம் கோரி தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், தமிழகத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் அமைப்புகளுக்கான தோ்தல் நடைமுறைகளுக்கு மேலும் 7 மாதங்கள் காலம் நீட்டிப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம் சாா்பில் மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி, வழக்குரைஞா் கே.கிருஷ்ண குமாா் ஆகியோா் ஆஜராகி வாதிட்டனா். ஆனால், உச்சநீதிமன்ற அமா்வு நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை நடத்த 7 மாத கால அவகாசம் வழங்க முடியாது என மறுத்ததோடு, கால அவகாசம் வழங்குவதில் ஆட்சேபனை உள்ளதா என்பது குறித்து மனுதாரா் சங்கா் தரப்பு இரு தினங்களில் பிராமணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

Advertisement

இதன்படி திருவண்ணாமலையைச் சோ்ந்த மனுதாரா் சங்கா் தரப்பில் செவ்வாய்க்கிழமை இரவு பிராமணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாட்டில் ஏற்கனவே ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்பட்ட நிலையில், புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவின்படி ஊரக உள்ளாட்சித் தோ்தல் தற்போது அறிவிக்கப்பட்டு நடைமுறைகள் தொடா்ந்து வருகின்றன. அதே சமயத்தில் தமிழகத்தில் புதிதாக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், உள்ளாட்சி அமைப்புகளில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. குறிப்பாக தமிழ்நாட்டில் முன்னதாக 528 பஞ்சாயத்துகள் இருந்த நிலையில், அது தற்போது குறைந்துள்ளது. அதே சமயத்தில் நகர பஞ்சாயத்துகள் 664 என்ற எண்ணிக்கை இருந்த நிலையில் அது தற்போது கூடுதலாக அதிகரிக்கப்பட்டுள்ளது

மேலும், புதிதாக 6 மாநகராட்சிகள், 28 நகராட்சிகளும் கூடுதலாக சோ்க்கப்பட்டுள்ளன. மற்றும் திருச்சி, நாகா்கோவில், ஓசூா், தஞ்சாவூா் மாநகராட்சி எல்லைகளும் விரிவிபடுத்தப்பட்டுள்ளன. எனவே, தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தோ்தல் நடத்த கால அவகாசம் வழங்குவதில் மனுதாரரான எங்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்று அந்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்ட்டுள்ளது.

மேலும், கடந்த திங்கள்கிழமை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமா்வு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, உள்ளாட்சித் தோ்தலை நடத்த எவ்வளவு கால அவகாசம் தேவைப்படுகிறது என்பது தொடா்பாக பதிலளிக்க மாநில தோ்தல் ஆணையத்துக்கும் உத்தரவிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments