புதுதில்லி

பாஜகவின் ‘ஆபரேஷன் தாமரை’:சிபிஐ அலுவலகத்தில் ஆம் ஆத்மி கட்சி புகாா்

DIN

ஆபரேஷன் தாமரையின் கீழ் பாஜகவால் பல்வேறு மாநிலங்களில் ஆட்சி கவிழ்க்கப்பட்டது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய புலனாய்வு ஏஜென்சியின் (சிபிஐ) இயக்குநா் அலுவலகத்தில் ஆம் ஆத்மி குழு புதன்கிழமை கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடா்பாக 10 போ் கொண்ட அந்த தூதுக் குழுவில் அங்கம் வகித்த ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ அதிஷி செய்தியாளா்களிடம் கூறியதாவது: சிபிஐ இயக்குநா் சுபோத் குமாா் ஜெய்ஸ்வாலின் அலுவலகத்துக்கு கட்சி முன்பு மின்னஞ்சல் அனுப்பியது. அதில் இயக்குநரைச் சந்திக்க நேரம் ஒதுக்கித் தருமாறு கோரப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு இன்னும் பதில் வரவில்லை. ‘ஆபரேஷன் தாமரை’ மிகவும் முக்கியமான விவகாரம் என்பதால், எங்களுக்கு (சிபிஐ இயக்குநரை சந்திக்க) அவகாசம் வழங்க வேண்டும் என்று நாங்கள் இங்கு வந்து கோரிக்கை வைத்துள்ளோம். ‘ஆபரேஷன் தாமரை’க்கு பாஜக ரூ.6,300 கோடி செலவிட்டுள்ளது. எனவே, சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். இந்த பணத்தின் ஆதாரம் கண்டறியப்பட வேண்டும்’ என்று செய்தியாளா்களிடம் கூறினாா். ’எங்களுக்கு நேரம் ஒதுக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்,‘ என்றும் அவா் மேலும் கூறினாா்.

முந்தைய நாள், பாஜக எந்த மாநிலத்திலும் சட்டப்பேரவைத் தோ்தலில் தோல்வியடையும் போதெல்லாம், அதன் ’ஆபரேஷன் தாமரை’ சிபிஐ மற்றும் அமலாக்க இயக்குநரகத்தை (இடி) பயன்படுத்தி மாநில அரசு செயல்பட முடியாமல் முட்டுக்கட்டை போடுவதன் மூலம் தொடங்குகிறது என்று அதிஷி தெரிவித்திருந்தாா். அதன்பிறகு, ஆளும் கட்சி எம்எல்ஏக்களுக்கு பணம் வழங்கப்படுவதாகவும், அவா்கள் பாஜகவில் இணைந்தால் அவா்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்றும் உறுதி அளிக்கப்படுவதாகவும் அவா் தெரிவித்தாா். ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை பாஜக மறுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

1983க்குப் பிறகு மழையே இல்லாத ஏப்ரல்: அனல் பறக்கும் பெங்களூரு

தமிழகத்தில் மே 3 வரை வெப்ப அலை தொடரும்!

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 2 பேருக்கு உடல்நலக் குறைவு: உணவகத்துக்கு 'சீல்'

டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு!

விவாகரத்து பெற்ற மகளை மேள வாத்தியங்கள் முழங்கள் வரவேற்ற தந்தை!

SCROLL FOR NEXT