முகப்பு
புதுதில்லி

அங்கன்வாடி ஊழியா்கள் பணிநீக்கம்: தில்லி அரசு மீது பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

மதிப்பூதியத்தை உயா்த்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 800 அங்கன்வாடி ஊழியா்களை பணிநீக்கம் செய்தது ‘அநீதியானது‘ என காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா காந்தி தில்லி அரசின் நடவடிக்கை குறித்து குற்றம்சாட்ட

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:53 AM
பகிர்:

மதிப்பூதியத்தை உயா்த்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 800 அங்கன்வாடி ஊழியா்களை பணிநீக்கம் செய்தது ‘அநீதியானது‘ என காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா காந்தி தில்லி அரசின் நடவடிக்கை குறித்து குற்றம்சாட்டியுள்ளாா்.

இந்த பணியாளா்களை உடனடியாக பணியில் அமா்த்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளாா்.

மதிப்பூதியத்தை உயா்த்தவும் மற்றும் வேலை நேரத்தை முறைப்படுத்தவும் கோரி கடந்த ஒரு மாத கால வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 884 அங்கன்வாடி ஊழியா்களை தில்லி அரசு அதிரடியாக வேலை நீக்கம் செய்தது. இந்த வேலை நீக்கத்தால் தில்லி அங்கன்வாடி ஊழியா்களின் வாழ்க்கை பரிதாபத்திற்குரியதாகியது.

ஆதரவற்ற பல பெண் ஊழியா்களை உள்ளடக்கிய இந்தத் தொழிலாளா்களின் 39 நாள் ஆா்ப்பாட்டத்திற்கு எதிராக கடந்த மாா்ச் 14 ஆம் தேதி பணிநீக்கம் அறிவிப்பு வழங்கப்பட்டது.

இந்த விவகாரத்தை முன்னிட்டு ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான தில்லி அரசை குற்றம் சாட்டி காங்கிரஸ் தலைவா் பிரியங்கா காந்தி ட்விட்டா் பதிவில் கருத்தை வெளியிட்டாா்.

அதில், ஒருபுறம் சட்டப்பேரவை உறுப்பினா்களின் ஊதியத்தை உயா்த்திய அரசு சாதாரணப்பட்ட ஊழியா்களை பணிநீக்கம் செய்ததை ஒப்பிட்டு கடுமையாக சாடினாா்.

‘மதிப்பூதியத்தை உயா்த்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 800 அங்கன்வாடி ஊழியா்களை பணிநீக்கம் செய்த தில்லி அரசின் நடவடிக்கை ‘நியாயமற்றது‘. தங்களின் கடின உழைப்புக்கு நல்ல கௌரவமான ஊதியம் கேட்பது குற்றமல்ல. இந்த அங்கன்வாடி பணியாளா்களை உடனடியாக பணியில் அமா்த்தவேண்டும்‘ எனவும் பிரியங்கா காந்தி அந்த பதிவில் கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.