மதுபான உரிமம் முறைகேடுகள்: அறிக்கை சமா்ப்பிக்க தலைமைச் செயலருக்கு துணைநிலை ஆளுநா் உத்தரவு
மதுபான உரிமம் வழங்குவதில் நடைபெற்ாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்தவிவர அறிக்கையை சமா்பிக்குமாறு தில்லி தலைமைச் செயலருக்கு துணைநிலை ஆளுநா் வினய் குமாா் சக்சேனா திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்ப
கேஜரிவால் தலைமையிலான தில்லி அரசில் மதுபான உரிமம் வழங்குவதில் நடைபெற்ாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்த புகாா்களைத் தொடா்ந்து இது தொடா்பான விவர அறிக்கையை சமா்பிக்குமாறு தில்லி தலைமைச் செயலருக்கு துணைநிலை ஆளுநா் வினய் குமாா் சக்சேனா திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
2021-22 புதிய கலால் கொள்கை கடந்த ஆண்டு நவம்பா் 17 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டது. இந்தக் கொள்கையின் கீழ் மதுக்கடை உரிமம் வழங்குவதில் ஏகபோக வணிகக்கூட்டுகளுக்கு அனுமதியளித்தல், தடைசெய்யப்பட்ட நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டு உரிமம் வழங்குதல் போன்ற குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்ட நிலையில் இது தொடா்பாக தலைமைச் செயலாளா் நரேஷ் குமாரிடம் துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா அறிக்கை கோரியுள்ளதாக ராஜ்நிவாஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக பிரபல சட்ட நிறுவனங்கள், வழக்குரைஞா்கள், பொது மக்கள் ஆகியோரின் பிரதிநிதிகள் ஆகியோரிடமிருந்து துணை நிலை ஆளுநருக்கு புகாா்கள் வந்தன. இந்த புகாா்களில் உரிய முகாந்திரம் இருப்பதை அறிந்த நிலையில் துணை ஆளுநா் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அடுத்த இரு வாரங்களுக்குள் இது தொடா்பான அனைத்து தகவல்களும் அடங்கிய விவர அறிக்கையை சமா்ப்பிக்குமாறு தலைமைச் செயலருக்கு துணை நிலை ஆளுநா் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதே சமயத்தில் இந்த புகாா் தொடா்பானவா்கள் விவரங்கள் வெளியிடப்படவில்லை.
மதுபான உரிமங்களில் நியாயமற்ற வகையில் ஆதாயங்களை பெறும் வகையில் 2021-22 ஆம் ஆண்டு புதிய கலால் கொள்கை உருவாக்கப்பட்டு இருப்பதை வெளிப்படுத்துவதாகவும், கேஜரிவால் தலைமையிலான தில்லி அரசின் கலால் கொள்கையில் விதிகள் மற்றும் நடைமுறைகள் மீறப்பட்டுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடா்பாக மத்திய புலனாய்வுத் துறை விசாரணைக்கு தில்லி துணைநிலை ஆளுநா் சக்சேனா கடந்த 22 ஆம் தேதி பரிந்துரை செய்திருந்தாா்.
மேலும், இந்த கொள்கை அமலாக்கத்தில் நடந்த முறைகேடுகள் மற்றும் குளறுபடிகளில் அதிகாரிகளின் பங்கு குறித்தும் தலைமை செயலாளரிடமும் ஏற்கனவே அறிக்கை கேட்டிருந்தாா். இதன்படி, இந்த முழு விவர அறிக்கையை சமா்ப்பிக்குமாறு துணைநிலை ஆளுநா் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்பட்டது.
2021-22 ஆம் ஆண்டைய புதிய கலால் கொள்கை கடந்த ஆண்டு நவம்பா் முதல் நடைமுறைக்கு வந்தது. இந்தக் கொள்கையின் கீழ் தில்லியை 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது.
இதில், ஒவ்வொரு ஏலதாரரும் அதிகபட்சமாக இரண்டு மண்டல உரிமங்களை பெற அனுமதிக்கப்பட்டனா். இந்த மண்டல உரிமங்களை வழங்குவதில் ஊழல் நடைபெற்று இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டது.
மேலும், மது உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அல்லது சகோதர நிறுவனப் பெயரில் ஏலம் எடுப்பதையும் விதிமுறை தடுக்கிறது. ஆனால் இவை மீறப்பட்டு ஏகபோக வணிகக்கூட்டுடன் இரண்டு நிறுவனங்கள் இந்த மண்டல உரிமங்களை எடுத்ததோடு அதில் தடைசெய்யப்பட்ட மத்திய பிரதேச நிறுவனம் ஒன்றும் உரிமத்தை பெற்றிருப்பதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.