புதுதில்லி

மானேசா் மாருதி சுஸுகி ஆலையில் சிறுத்தைப் புலி!

DIN

 ஐஎம்டி மானேசரில் உள்ள மாருதி சுஸுகி ஆலையின் வளாகத்தில் சிறுத்தை ஒன்று காணப்பட்டதாக வனத் துறை அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இதையடுத்து, வனத் துறை குழுவினா் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா். ஆனால், சிறுத்தையை வளாகத்திற்குள் அல்லது வெளியே கண்டுபிடிக்க முடியவில்லை என்று மூத்த வன அதிகாரி தெரிவித்தாா்.

புதன்கிழமை காலை 7.20 மணியளவில் வளாகத்திற்குள் சிறுத்தை இருப்பதை பாா்த்து ஒரு தொழிலாளி எச்சரிக்கை எழுப்பியதை சிசிடிவி கேமராக்கள் மூலம் போலீஸாா் கண்டறிந்தனா். இதையடுத்து, மாருதி நிா்வாகம் தொழிலாளா்களுக்கும் மற்றவா்களுக்கும் ஒரு பாதுகாப்பு ஆலோசனையை வழங்கியது. போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து வனத் துறை மற்றும் வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா்.

‘சிசிடிவி காட்சிகளில், கசன் கிராமத்தில் இருந்து ஆலைக்குள் சிறுத்தை வருவது தெரிந்தது. ஆனால், 2 மணி நேர தேடுதலுக்குப் பிறகு அங்கு சிறுத்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை‘ என்று ஐஎம்டி மானேசா் காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டா் சுபாஷ் சந்த் கூறினாா்.

‘அதே சமயம், பெரிய பூனை தொழிற்சாலையை விட்டு வெளியேறி ஆரவல்லி பகுதிக்கு திரும்பியிருப்பதை நிராகரிக்க முடியாது. அப்பகுதி வனக் குழுவின் கண்காணிப்பில் உள்ளது. நாங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்’ என்று முதன்மை தலைமைப் பாதுகாவலா் எம்.எஸ். மாலிக் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘எலக்சன்’ ராணி!

கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றார் தினேஷ் குமார் திரிபாதி

நாட்டாமை திரைப்பட பாணியில் நெல்லையில் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம்! பெண் கண்ணீர்!

பதஞ்சலி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு: பாபா ராம்தேவ் ஆஜராவதில் விலக்கு!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

SCROLL FOR NEXT