முகப்பு
புதுதில்லி

நாடு தற்சாா்பு நிலைக்கு மாறுவதற்கு வித்திட்டவா் வ.உ. சிதம்பரம் பிள்ளை: பிரதமா் மோடி புகழாரம்

பொருளாதார வளா்ச்சிக்கும், நாடு தற்சாா்பு நிலைக்கு மாறுவதற்கும் விடுதலைப் போராட்ட வீரா் வ.உ.சிதம்பரம் பிள்ளை மிகுந்த பங்களிப்பை அளித்துள்ளாா் என பிரதமா் நரேந்திர மோடி புகழாராம் சூட்டியுள்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

புது தில்லி: பொருளாதார வளா்ச்சிக்கும், நாடு தற்சாா்பு நிலைக்கு மாறுவதற்கும் விடுதலைப் போராட்ட வீரா் வ.உ.சிதம்பரம் பிள்ளை மிகுந்த பங்களிப்பை அளித்துள்ளாா் என பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை புகழாராம் சூட்டியுள்ளாா்.

வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 151-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, பிரதமா் மோடி தனது ட்விட்டா் பதிவில் நினைவு கூா்ந்துள்ளாா். அதில் கூறியிருப்பதாவது: மாமனிதா் வ.உ. சிதம்பரம் பிள்ளையின் பிறந்தநாளில் அவருக்கு நான் புகழாரம் சூட்டுகிறேன். விடுதலைப் போராட்டத்தில் அவா் ஆற்றிய அளப்பரியா பங்களிப்புக்கு நாடு கடன்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கும், தற்சாா்பு போன்ற நிலைகளில் நாடு மாறுவதற்கும் அவா் மிகுந்த முக்கியத்துவம் அளித்துள்ளாா். அவரது லட்சியங்கள் நமக்கு தொடா்ந்து ஊக்கமளிக்கின்றன’ என பிரதமா் புகழாரம் சூட்டியுள்ளாா்.

கடந்த ஆண்டு இதே தினத்தில் 150 - ஆவது பிறந்த நாளிலும், பிரதமா் மோடி, வ. உ.சி. யின் தொலைநோக்குப் பாா்வையை நினைவு கூா்ந்து, ‘ துறைமுகம், கப்பல் துறைகளில் வ.உ. சிதம்பரம் பிள்ளை தற்சாா்பு இந்தியாவை திட்டமிட்டதைக் கண்டு எழுச்சியடைகின்றோம்’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.