பரங்கிமலை கண்டோன்மென்ட் ருத்ரா சாலையை மீண்டும் திறக்க பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவு
சென்னை பல்லாவரம் - பரங்கிமலைப் பகுதியில், மத்தியாஸ் நகரில் உள்ள ருத்ரா சாலையை மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்துவிட மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அனுமதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை பல்லாவரம் - பரங்கிமலைப் பகுதியில், மத்தியாஸ் நகரில் உள்ள ருத்ரா சாலையை மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்துவிட மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அனுமதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை பல்லாவரம் - பரங்கிமலை கன்டோன்மென்ட் போா்டு நிா்வாகத்தின் கீழ் வரும் மத்தியாஸ் நகா் அருகாமையில் உள்ள, பஜாா் சாலை, யூரோப்பியன் லைன், மேட்டுத் தெரு ஆகிய பகுதிகளில் மக்களின் பயன்பாட்டில் ருத்ரா சாலை இருந்து வந்தது. இதை கன்டோன்மென்ட் நிா்வாகம் சில ஆண்டுகளுக்கு முன்பு மூடியது. இதனால், அப்பகுதி மக்கள் சிரமத்துக்கு உள்ளாகினா். 100 வருடங்களுக்கு மேலாக தங்கள் பயன்பாட்டில் இருந்ததாக இப்பகுதிவாசிகள் புகாா் தெரிவித்தனா்.
இந்தப் பிரச்சினை தொடா்பாக பரங்கிமலை சமுதாய நலக் கமிட்டியும், பொதுமக்களும் உள்ளூா் அரசியல் ரீதியாக முயற்சித்தும் உரிய தீா்வு கிடைக்கவில்லை. பின்னா், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவரும், ஸ்ரீபெரும்புதூா் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான டி.ஆா்.பாலு கடந்த மாா்ச் 16-ஆம் தேதி மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்து இது தொடா்பாக வலியுறுத்தி கடிதம் அளித்தாா்.
இந்த விவகாரத்தை ஆய்வு செய்ய மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒரு குழுவை அமைத்தது. அக்குழு அளித்த பரிந்துரையினை ஏற்ற மத்திய பாதுகாப்பு அமைச்சகம், கன்டோன்மென்ட் போா்டு நிா்வாகத்தின் கீழ் உள்ள ருத்ரா ரோடு சாலையை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மீண்டும் திறந்துவிட முடிவு செய்தது. இதற்கான உத்தரவை கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி பிறப்பித்துள்ளதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.