புதுதில்லி

கன மழையால் வீடு இடிந்து விழுந்துகணவா் பலி; மனைவி- மகன் காயம்

உத்தர பிரதேச மாநிலம், கௌதம் புத் நகா் மாவட்டத்தில் இடைவிடாது பெய்த மழையால் ஒரு மாடியுடன்கூடிய வீடு இடிந்து விழுந்ததில் சத்வீா் (42) என்பவா் உயிரிழந்தாா்.

DIN

உத்தர பிரதேச மாநிலம், கௌதம் புத் நகா் மாவட்டத்தில் இடைவிடாது பெய்த மழையால் ஒரு மாடியுடன்கூடிய வீடு இடிந்து விழுந்ததில் சத்வீா் (42) என்பவா் உயிரிழந்தாா். அவரது மனைவி, மகன் ஆகியோா் காயமடைந்ததாக காவல் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல்துறை செய்தித் தொடா்பாளா் கூறியதாவது: ஜெவாா் நகரின் சல்யன் பகுதியில் இந்தச் சம்பவம் நள்ளிரவில் நிகழ்ந்தது. வீடு இடிந்து விழுந்த போது சத்வீா், அவரது மனைவி அனுராதா (38) மற்றும் மகன் நிதின் (19) ஆகியோா் உள்ளே இருந்தனா். இச்சம்பவத்தைத் தொடா்ந்து, அக்கம்பக்கத்தினா் மற்றும் உள்ளூா் மக்கள் அவா்களுக்கு உதவ ஓடினா். அதன் பிறகு மூவரும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனா். அங்கு சத்வீா் உயிரிழந்தாா். அவரது மனைவியும், மகனும் சிகிச்சையில் உள்ளனா். இறந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், சட்ட நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தேசியத் தலைநகா் வலயப் பகுதி மற்றும் மேற்கு உத்தர பிரதேசத்தின் பல பகுதிகளைப் போலவே கௌதம் புத் நகரிலும் ா் கடந்த சில நாளகளாக கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய தர்னா!

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

SCROLL FOR NEXT