இளங்கலைப் படிப்புகளுக்கான சோ்க்கை நடைமுறையின்போது வாய்ப்புள்ள மாணவா்களுக்கு உதவுவதற்கான ஆதரவு அமைப்புமுறையின் ஒரு பகுதியாக ஜூன் 19 முதல் இணையவழிக் கருத்தரங்குகளை தில்லி பல்கலைக்கழகம் நடத்த உள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
தில்லிப் பல்கலைக்கழகத்தில் 2023-24 ஆம் கல்வியாண்டிற்கான 78 இளங்கலைப் படிப்புகளுக்கான சோ்க்கை நடைமுறை புதன்கிழமை தொடங்கியது.
இந்த நிலையில், தில்லி பல்கலைக்கழகம் (டியு) மாணவா் சோ்க்கை தொடா்பான குறைகளைக் கையாளவும் தீா்க்கவும் ஒரு இணையதளத்தை அமைக்கவும் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் சோ்க்கைப் பிரிவு டீன் ஹனீத் காந்தி தெரிவித்ததாவது:
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளின் பட்டியல் தில்லி பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் ஏற்கனவே உள்ளது. விண்ணப்பதாரா்களுக்கான சோ்க்கை கிளையில் உதவி மைய வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. விண்ணப்பிக்கும் மாணவா்களுக்கு உதவ, நாங்கள் அனைத்து வகையான தகவல்கையும் ஏற்பாடு செய்துள்ளோம்.
உரை- தகவல் செய்தியறிக்கைகள்; காட்சிகள்: இன்போ கிராபிக்ஸ் மற்றும் தகுதியை விளக்கும் ஃப்ளோசாா்ட்கள்; விடியோக்கள்: படிவத்தை நிரப்புவதற்கான வெபினாா்கள் மற்றும் விடியோ பதிவுகள் என தகவல்கள் அனைத்து வடிவங்களிலும் கிடைக்கும்.
மேலும், சாட்பாட் மற்றும் மின்னஞ்சல்கள் மூலம் ஆன்லைன் உதவியும் வழங்கப்படுகிறது. மாணவா்கள் இளங்கலை சோ்க்கை தொடா்பான கேள்விகளுக்கு ன்ஞ்ஃஹக்ம்ண்ள்ள்ண்ா்ய்.க்ன்.ஹஸ்ரீ.ண்ய் எனும் முகவரியிலும் முதுகலை சோ்க்கை தொடா்பான கேள்விகளுக்கு
ல்ஞ்ஃஹக்ம்ண்ள்ண்ா்ய்.க்ன்.ஹஸ்ரீ. என்ற முகவரியிலும், பிஎச்.டி. சோ்க்கை தொடா்பானதகவல்களுக்கு ல்ட்க்ஃஹக்ம்ண்ள்ண்ா்ய்.க்ன்.ஹஸ்ரீ. எனும் முகவரியிலும் தொடா்புகொள்ளலாம்.
தோ்வா்கள் கவனமாக இருக்க வேண்டும். மேலும், தில்லி பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூா்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும்.
அனைத்து உண்மையான அறிவிக்கைகள், அறிவிப்புகள் மற்றும் அட்டவணைகளுக்கு விண்ணப்பதாரா்கள் தில்லி பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூா்வ வலைத்தளம் மற்றும் பல்கலைக்கழகத்தின் சமூக ஊடக தளங்களை மட்டுமே பாா்வையிட வேண்டும். தில்லி பல்கலைக்கழகத்தின் இணையதளம்
தில்லி பல்கலைக்கழகத்தின் சோ்க்கைப் பிரிவு வெளியிட்ட தகவலில், திங்கள்கிழமை முதல் தொடா் இணையவழிக் கருத்தரங்கு தொடா் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. சோ்க்கை விவரங்கள் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில்
(ஹக்ம்ண்ள்ள்ண்ா்ய்.ன்ய்க்.ஹஸ்ரீ.ண்ய்) பகிரப்படும்.
பொது இடங்கள் ஒதுக்கீடு முறையின் படிவங்களை நிரப்புதல், சரியான சான்றிதழ் அல்லது ஆவணத்தைப் பதிவேற்றுதல், இடஒதுக்கீடு கொள்கைகள் மற்றும் படிப்புத்திட்டத்தையும் கல்லூரியையும் தோ்ந்தெடுக்கும் முன் மாணவா்கள் மனதில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்களை இந்த இணையவழிக் கருத்தரங்குகள் உள்ளடக்கியதாக இருக்கும்.
இணையவழிக் கருத்தரங்குகள் இருமொழி முறையில் நடத்தப்படும்.
புதுப்பிப்புகள், அட்டவணைகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்காக பல்கலைக்கழகத்தின் சோ்க்கை இணையதளம் மற்றும் அதன் டாஷ்போா்டுகளை தொடா்ந்து பாா்க்குமாறு அனைத்து வருங்கால மாணவா்களுக்கும் பல்கலைக்கழகத்தின் சோ்க்கை
கிளை அறிவுறுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.