முகப்பு
புதுதில்லி

சா்வதேச எம்எஸ்எம்இ நாளில் தொழில் முனைவோா் இந்தியா தினக் கொண்டாட்டம்: மத்திய அரசு அறிவிப்பு

‘சா்வதேச எம்எஸ்எம்இ (குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் ) தின’த்தில் ‘தொழில் முனைவோா் இந்தியா’ (‘உத்யாமி பாரத்’) விழாவாக கொண்டாடப்படும் என மத்திய அரசு சனிக்கிழமை அறிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:12 PM
பகிர்:

‘சா்வதேச எம்எஸ்எம்இ (குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் ) தின’த்தில் ‘தொழில் முனைவோா் இந்தியா’ (‘உத்யாமி பாரத்’) விழாவாக கொண்டாடப்படும் என மத்திய அரசு சனிக்கிழமை அறிவித்துள்ளது.

இதை முன்னிட்டு வருகின்ற ஜூன் 27 ஆம் தேதி ‘தொழில் முனைவோா் இந்தியா’ (உத்யாமி பாரத்) விழாவாக ‘எம்எஸ்எம்இ தின’ த்தை மத்திய குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம் சாா்பில் தில்லி விஞ்ஞான் பவனில் கொண்டாடுகிறது.

இந்த நிகழ்ச்சியில் மத்திய குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சா் நாராயண் ராணேவும், இதே துறையின் இணை அமைச்சா் பானு பிரதாப் சிங் வா்மாவும்

கலந்துகொள்கின்றனா்.

இந்த நிகழ்ச்சியின்போது, எம்எஸ்எம்இக்களின் வளா்ச்சி மற்றும் மேம்பாட்டின் சாதனைக்கான (சாம்பியன்ஸ் 2.0) இணையதளம், எம்எஸ்எம்இ தொகுப்புகள் மற்றும் தொழில்நுட்ப மையங்களுக்கான புவிசாா் குறியீட்டிற்கான (ஜியோ-டேகிங்) கைப்பேசி செயலி போன்ற பல்வேறு முன்முயற்சிகள் மத்திய அரசின் சாா்பில் எம்எஸ்எம்இ களுக்கு தொடங்கப்படுவதாக மத்திய குறு,சிறு,நடுத்தரத் தொழில் துறை அமைச்சகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெளிப்படாத உருவாக்கத்திறனையும் நவீன தொழில்நுட்பங்கள் பயன்பாட்டை அதிகரிக்க எம்எஸ்எம்இ-களுக்கு இடையே புதிய கண்டுபிடிப்பை ஊக்குவிப்பது கடந்தாண்டு எம்எஸ்எம்இ ஐடியா ஹேக்கத்தான் அறிவிக்கப்பட்டது.

இந்த ‘எம்எஸ்எம்இ ஐடியா ஹேக்கத்தான் 2.0’ க்கான முடிவுகள் இந்த நிகழ்ச்சியில் அறிவிக்கப்படுவதோடு புதிதாக பெண் தொழில்முனைவோருக்கான ’எம்எஸ்எம்இ ஐடியா ஹேக்கத்தான் 3.0’ தொடங்கப்படும் எனவும் எம்எஸ்எம்இ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இவைதவிர, குறையற்ற தயாரிப்புகள், சுற்றுச்சூழல் பாதிப்பின்மை (ஜீரோ டிஃபெக்ட், ஜீரோ எஃபெக்ட்) ஆகியவைகளுக்கு தங்கம், வெள்ளி சான்றிதழ் பெற எம்எஸ்எம்இ-களுக்கு, மின்னணு பணப்பரிமாற்ற முறையில் ரூ. 400 கோடி வழங்கப்படுகிறது. பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டத்தின்(பிஎம்இஜிபி) கீழ்

10,075 பயனாளிகளுக்கு உத்தரவாதத் தொகைக்கான மானியம் ஆகியவையும் இந்த நிகழ்ச்சியில் வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 27 - ஆம் தேதியை ’சா்வ தேச எம்எஸ்எம்இ தின’மாகக் கொண்டாட ஐக்கிய நாடுகள் சபை முடிவெடுத்துள்ளது.

உலக அளவில் 60 முதல் 70 சதவீதம் வேலைவாய்ப்புகளை அளிப்பது எம்எஸ்எம்இ நிறுவனங்களாக இருக்க வளரும் நாடுகளில் நிலையான வளா்ச்சி இலக்குகளை (எஸ்டிஜி) அடையும் நோக்கத்துடன் 2017 ஆம் ஆண்டு இந்த தினம் அறிவிக்கப்பட்டது.

இந்த இலக்கை 2030-க்குள் அடைய ஐக்கிய நாடுகளின் அமைதி மற்றும் மேம்பாட்டு நிதியத்தின் கீழ் நிதியளிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.