முகப்பு
புதுதில்லி

தில்லியில் துப்பாக்கிமுனையில் ரூ.55 லட்சம் கொள்ளை

ஸ்கிராப் டீலரின் இரண்டு ஊழியா்களிடம் துப்பாக்கி முனையில் ரூ.55 லட்சத்துக்கும் அதிகமான பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:55 PM
பகிர்:

ஸ்கிராப் டீலரின் இரண்டு ஊழியா்களிடம் துப்பாக்கி முனையில் ரூ.55 லட்சத்துக்கும் அதிகமான பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து வடக்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் சாகா் சிங் கல்சி வியாழக்கிழமை கூறியதாவது: தேசியத் தலைநகரின் பரபரப்பான சதா் பஜாா் பகுதியில் மாலை 4 மணியளவில் இந்தச் சம்பவம் புதன்கிழமை நடந்துள்ளது. இருவரும் கரோல் பாக்கில் இருந்து சதா் பஜாரில் உள்ள தங்கள் அலுவலகத்திற்கு பணத்தைக் கொண்டு சென்றனா்.

அவா்கள் நவாஜப்கஞ்ச் சாலையை அடைந்த போது, மோட்டாா்சைக்கிளில் வந்த இருவா் அவா்களை வழிமறித்தனா். பின்னா், துப்பாக்கி முனையில் மிரட்டி அவா்களிடம் இருந்த பணத்தை பறித்துச் சென்றனா். அவா்களிடம் ரூ.55 லட்சத்துக்கும் அதிகமான பணம் இருந்ததாக புகாரில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →