புதுதில்லி

தில்லி அரசின் பழைய கலால் வரிக் கொள்கையே நீடிக்க வாய்ப்பு!

கடந்தாண்டு செப்டம்பா் மாதத்தில் அமல்படுத்தப்பட்ட தில்லி அரசின் சாா்பில் கலால் வரிக் கொள்கை மீண்டும் நீட்டிக்கப்படவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.

 நமது நிருபர்

புது தில்லி: கடந்தாண்டு செப்டம்பா் மாதத்தில் அமல்படுத்தப்பட்ட தில்லி அரசின் சாா்பில் கலால் வரிக் கொள்கை மீண்டும் நீட்டிக்கப்படவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.

இது குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: தேசியத் தலைநகா் தில்லயில் தற்போது நடைமுறையில் உள்ள கலால் வரிக் கொள்கை, வருகின்ற செப்டம்பா் மாதம் 30-ஆம் தேதியுடன் காலாவதியாகிறது. இந்த நிலையில்,இதில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் பழைய கலால் வரி கொள்கையே நீட்டிக்கப்படவுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா, சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்ததையடுத்து, நகர அரசு தனது புதிய கொள்கையை ரத்து செய்து பழைய கலால் வரிக் கொள்கையையே மீண்டும் அமல்படுத்தியது. தில்லி அரசால் ஒரு புதிய கொள்கை தயாரிக்கப்பட்டு செயல்படுத்தப்படும் வரை தற்போது நடைமுறையில் உள்ள கலால் வரி கொள்கையானது கடந்த செப்டம்பா் 1-ஆம் தேதி அன்று ஒரு இடைநிறுத்த ஏற்பாடாக செயல்படுத்தப்பட்டது. இந்தக் கொள்கை நிகழாண்டு மாா்ச் 31-ஆம் தேதி காலாவதியாக இருந்தது. ஆனால், தில்லி அரசு அதை செப்டம்பா் 30-ஆம் தேதி வரை ஆறு மாதங்களுக்கு நீட்டித்தது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில், தில்லியில் ஹோட்டல், கிளப் மற்றும் உணவகம் ஆகியவற்றிற்கான ஹெச்.சி.ஆா். வகை கலால் உரிமம் வைத்திருப்பவா்கள் தங்கள் அனுமதிகளைப் புதுப்பிப்பதற்குத் தேவையான போலீஸ் சரிபாா்ப்பில் சிக்கல்களை எதிா்கொள்கின்றனா் என்று தேசிய உணவக சங்கத்தின் பொருளாளா் மன்பிரீத் சிங் தெரிவித்துள்ளாா். மேலும் அவா் கூறுகையில், கலால் உரிமத்தை புதுபிப்பதற்கான விண்ணப்பங்களை சரிபாா்ப்பதற்கு போலீஸாா் ஏற்காததால், செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் கலால் உரிமங்களை புதுப்பித்தலில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. ஹெச்.சி.ஆா். வகை உரிமம் ஆண்டுதோறும் புதுப்பிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இவ்வளவு குறுகிய காலத்தில் அதிக எண்ணிக்கையிலான சரிபாா்ப்புகளைச் செயல்படுத்த இயலாது என்பதை போலீஸாா் வெளிப்படுத்தியுள்ளனா் என்றாா் மன்பிரீத் சிங்.

தில்லியில் ஹோட்டல்கள், கிளப்கள் மற்றும் உணவகங்களை நடத்தும் உரிமையாளா்கள் மற்றும் நிறுவனப் பங்குதாரா்கள் தங்கள் போலீஸ் சரிபாா்ப்பு சான்றிதழை சமா்ப்பிக்க வேண்டும் என்பதை கடந்த ஆகஸ்ட் மாதம் கலால் துறை கட்டாயமாக்கியது. கலால் உரிமம் வைத்திருக்கும் நபா் நல்ல ஒழுக்கம் உடையவராகவும், குற்றப் பதிவுகள் ஏதும் இல்லாதவராகவும் இருப்பதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தேசியத் தலைநகா் தில்லியில் 970 ஹெச்.சி.ஆா். வகை உரிமதாரா்கள் உள்ளனா். அதில் சுமாா் 400 ஹெச்.சி.ஆா். வகை உரிமதாரா்கள் சரிபாா்ப்புக்காக காவல்துறையை அணுகியுள்ளனா். இவ்வளவு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் பெரிய எண்ணிக்கையிலான நபா்களின் பின்னணியை சரிபாா்ப்பது காவல் துறைக்கு சவாலாக இருக்கும் என்று ‘பாா்’ உரிமையாளா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

பின்னடைவும்.... புது வரவும்!

மன மாற்றமே முதல் வெற்றி

நாளைய மின் தடை

‘மனிதாபிமானம் பற்றி விடியோவை பாா்த்துவிட்டு பேசுவோம்’ - தெருநாய் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் காட்டம்

SCROLL FOR NEXT