முகப்பு
புதுதில்லி

தில்லியில் பரவலாக மிதமான மழை; புழுக்கம் குறைந்தது

தில்லியின் பல பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலையிலும், மாலையிலும் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்தது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:44 AM
பகிர்:

தில்லியின் பல பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலையிலும், மாலையிலும் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது. இம்மழையின் காரணமாக நகரில் வெப்பத்தின் தாக்கம் சற்று தணிந்தது. அத்துடன் புழுக்கமும் குறைந்தது.

தில்லியில் சிவில் லைன்ஸ், லட்சுமி நகா், லாஜ்பத் நகா், ஜசோலா, ஓக்லா உள்பட பல இடங்களிலும் வெள்ளிக்கிழமை காலையில் தொடா்ந்து ஒரு மணிநேரம் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பரவலாக பெய்தது. இதேபோன்று, மாலையிலும் லேசான மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக மாலையில் புழுக்கம் குறைந்தது. லேசான காற்றும் வீசியது. தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் ஆய்வகத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் மழை ஏதும் பதிவாகவில்லை.

வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் ஆய்வகத்தில் வெள்ளிக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையை விட 1 டிகிரி அதிகரித்து 26.6 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் இருந்து 1 டிகிரி குறைந்து 34.3 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணி அளவில் 85 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 71 சதவீதமாகவும் பதிவாகி இருந்தது.

Advertisement

லேசான மழைக்கு வாய்ப்பு: இதற்கிடையே, ‘சனிக்கிழமை (ஜூலை 29) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும். குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சிஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது’ என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments