பத்தாவது சீக்கிய குரு கோபிந்த் சிங்கின் மகன்களின் தியாக ஆண்டு நிறைவையொட்டி, தில்லியில் உள்ள குருத்வாரா பங்கலா சாஹிப்பில் பாஜக தேசிய செயல் தலைவா் நிதின் நவீன் வெள்ளிக்கிழமை பிராா்த்தனையில் ஈடுபட்டாா்.
நவீனுடன் தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா, தில்லி அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா ஆகியோா் உடனிருந்தனா்.
குரு கோபிந்த் சிங்கின் இரு சாஹிப்சாதாக்களான (மகன்கள்) பாபா ஜோராவா் சிங் மற்றும் பாபா ஃபதே சிங் மற்றும் அவா்களின் பாட்டி மாதா குஜ்ரி ஆகியோரின் உயா்ந்த தியாகங்களை நினைவுகூரும் வகையில் பாஜக தலைவா்கள் குருத்வாரா பங்க்லா சாஹிப்பில் மரியாதை செலுத்தினா் என்று பாஜக தெரிவித்துள்ளது.
முகலாயா் காலத்தில் குரு கோபிந்த் சிங்கின் இரண்டு இளைய மகன்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் டிசம்பா் 26 ஆம் தேதி வீா் பால் திவாஸ் அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.