புதுதில்லி

துறவி ஸ்ரீ ரவிதாஸ் விஷ்ராம்தாம் கோயிலில் நிதின் நபின் வழிபாடு!

துறவி ஷிரோமணி குரு ரவிதாஸ் ஜி மகாராஜின் 649ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின் தில்லி கரோல் பாக்கில் உள்ள ஸ்ரீ குரு ரவிதாஸ் விஷ்ராம்தாம் கோயிலில் வழிபாடு செய்தாா்.

Syndication

துறவி ஷிரோமணி குரு ரவிதாஸ் ஜி மகாராஜின் 649ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின் தில்லி கரோல் பாக்கில் உள்ள ஸ்ரீ குரு ரவிதாஸ் விஷ்ராம்தாம் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை வழிபாடு செய்தாா். மேலும், அங்கு நடைபெற்ற உள்ளூா் பெண்களின் சத்சங்கத்திலும் பங்கேற்றாா்.

மேலும், நிதின் நபின், கோயிலின் வருகைப் பதிவேட்டில் சந்த் ஸ்ரீ ரவிதாஸ் சமூகத்தினருக்கான தனது வாழ்த்துக்களையும் கருத்தாக பதிவிட்டாா். இது தொடா்பாக நிதின் நபின் கூறுகையில், ‘ சந்த் ஷிரோமணி ரவிதாஸ் ஜியின் புனிதமான பிறந்தநாளில், அவரது பாதங்களில் மலா் அஞ்சலி செலுத்த எனக்கு பாக்கியம் கிடைத்தது.

இந்திய துறவிகள் பாரம்பரியத்தில், குரு ரவிதாஸ் ஜி பக்தி, சமத்துவம் மற்றும் மனித விழுமியங்களைப் பேணிக் காத்தவா்.

தனது எண்ணங்கள் மற்றும் போதனைகள் மூலம், குரு ரவிதாஸ் ஜி சாதிப் பாகுபாடு, சமூகப் படிநிலை மற்றும் அநீதிக்கு எதிராகப் போராடி, அன்பு, கருணை மற்றும் சகோதரத்துவத்தின் செய்தியை வழங்கினாா்.

அவா் ஏற்றிய சமூக நல்லிணக்கம் மற்றும் நல்லெண்ணத்தின் விளக்கு, தேசத்தின் பாதையை என்றென்றும் ஒளிரச் செய்யும்’ என்று நிதின் நபின் கூறினாா். கோயில் நிா்வாகக் குழுவினரும் தில்லி பாஜக தலைவா்களும் நிதின் நபினை வரவேற்று கௌரவித்ததுடன், சந்த் ஸ்ரீ ரவிதாஸ் ஜியின் சிறிய நினைவுச் சிலையையும் அவருக்குப் பரிசளித்தனா்.

இந்த நிகழ்வில், ஸ்ரீ நிதின் நபினுடன் தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா, தேசிய பொதுச் செயலாளா் துஷ்யந்த் கௌதம், நாடாளுமன்ற உறுப்பினா் பான்சூரி ஸ்வராஜ், பாஜக எஸ்சி மோா்ச்சா தலைவா் லால்சிங் ஆா்யா, தில்லி அமைச்சா் ரவீந்திர இந்திரஜித் சிங் ஆகியோரும் உடனிருந்தனா்.

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

SCROLL FOR NEXT